in

யோகி பாபுவை கேவலப்படுத்திய தொகுப்பாளனி பாவனா… வலுக்கும் கண்டனம்


Watch – YouTube Click

யோகி பாபுவை கேவலப்படுத்திய தொகுப்பாளனி பாவனா… வலுக்கும் கண்டனம்

சென்ற வாரம் ரவி மோகன் புதிதாக ஸ்டுடியோ ஒன்றை ஆரம்பித்தார். அந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தொகுப்பாளனி பாவனா அங்கு வந்த எல்லா நடிகர் நடிகைகளையும் பேட்டி எடுத்த பாவனா யோகி பாபுவிடம் உங்க மைண்ட் வாய்ஸ் என்ன சொல்லுது என்று கேள்வி கேட்டார்.

அதற்கு யோகி பாபு என்னை வைத்து ரவி மோகன் படம் இயக்குகிறார் படமும் சரி பட நிறுவனமும் நன்றாக வளர வேண்டும் இதா…ன் என் ஆசை என்று யோகி பாபு கூற அதற்கு பாவனா நல்லவர் மாதிரி பேசுறீங்களே அதைத் தாண்டி என்ன நினைக்கிறீங்க என கேட்டார்.

இதை கேட்டதும் கடுப்பான யோகி பாபு நான் நல்லதை தான் நினைத்தேன். பின்னாடி நிற்கும்போது அந்த மனுஷனுக்கு வழி விடாதீங்க Chair போடாதீங்க..இன்னு உன்ன மாதிரி எதுவும் நினைக்கலையே என்றார்.

இந்த சர்ச்சையான பேச்சு தற்பொழுது வைரலாகி பாவனாவிற்கு எதிராக கடும் கண்டனம் எழுந்துள்ளது.

இதற்கு காரணம் யோகி பாபு டிவி நிகழ்ச்சியில் பங்கேற்ற பொழுது தொகுப்பாளனியாக இருந்த பாவனாவிற்கும் யோகி பாபு…விற்கும் இடையே நடந்த பிரச்சனையை மனதில் வைத்துக்கொண்டு தான் பாவனா பலர் முன்னிலையில் யோகி பாபுவை அசிங்கப்படுத்தி இருக்கிறார் என்று பலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதற்கு பாவனா ஜாலியாக பேசுவதை விமர்சிக்காதீர்கள் எங்களுக்குள் ஈகோ எதுவும் இல்லை நாங்கள் நல்ல நண்பர்கள் தான் என்று பாவனா விளக்கம் கொடுத்திருக்கிறார்.

What do you think?

Jailer 2..வில் இணையும் பிரபலம்

அருள்மிகு முத்தாலம்மன் திருவிழா அக்னிசட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்