in

ஏழுமலையானை குடும்பத்துடன் வழிபட்டார் எடப்பாடி பழனிச்சாமி

ஏழுமலையானை குடும்பத்துடன் வழிபட்டார் எடப்பாடி பழனிச்சாமி

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஏழுமலையான் வழிபாட்டிற்காக நேற்று மாலை திருப்பதி மலைக்கு வந்தார்.

நேற்று திருப்பதி மலையில் வராஹ சாமியை வழிபட்ட அவர் இன்று காலை குடும்பத்துடன் கோவிலுக்கு சென்று ஏழுமலையானை வழிபட்டார்.

விஐபி பிரேக் தரிசனம் மூலம் ஏழுமலையானை வழிபட்ட அவருக்கு தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்ட நிலையில் வேத பண்டிதர்கள் வேத ஆசி வழங்கினர்.

இதனை தொடர்ந்து ஏழுமலையான் கோவில் எதிரில் இருக்கும் ஆஞ்சநேய சுவாமி கோவிலுக்கு சென்ற அவர் அங்கும் சாமி கும்பிட்டு தொடர்ந்து அங்குள்ள அகிலாண்டம் பகுதியில் தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி வழிபாடு மேற்கொண்டார்.

What do you think?

மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோவிலில் சித்திரை மாத பௌர்ணமி தின திருவிளக்கு பூஜை

அரசு கல்லூரிகளில் கூடுதலாக 25 சதவீத மாணவர் சேர்க்கைக்கு நடவடிக்கை அமைச்சர் கோவி. செழியன்