மதுபோதையில் லாரியை(ஈச்சர்) இயங்கிய ஒட்டுநர் – புளிய மரத்தின் மோதி விபத்து
திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகே சில்வார்பட்டியைச் சேர்ந்தவர் கருப்பன் மகன் மணிகண்டன் (வயது 32). இவர் ஒத்தக்கடை பகுதியில் இருந்து கயிறுகளை ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது நத்தம் அருகே குட்டூரில் சாலையோரம் இருந்த புளிய மரத்தில் மோதி லாரி விபத்துக்குள்ளானது.இதில் லாரியின் முன்பகுதி முற்றிலும் சேதமடைந்தது. இதில் மதுபோதை வாகனத்தை ஓட்டி வந்த ஓட்டுநர் வலது கையில் முறிவு ஏற்பட்டு.
சிகிச்சைக்காக நத்தம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மேலும் மருத்துவமனையில் வீடியோ எடுத்த செய்தியாளரிடம் என் பிரச்சனை என்னோட போகட்டும் வீடியோ எடுக்காத உன்னை சும்மா விடமாட்டேன் என மது போதையில் பேசினர்.


