40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க சங்கு சக்கரத்தை நன்கொடை
சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனம் திருப்பதி ஏழுமலையானுக்கு இரண்டு கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க சங்கு சக்கரத்தை நன்கொடையாக வழங்கியது.
சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனம் (சுதர்சன் எண்டர்பிரைசஸ்). அந்த நிறுவனம் சார்பில் திருப்பதி ஏழுமலையானுக்கு சுமார் 2 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பும் இரண்டரை கிலோ எடையுள்ள தங்க சங்கு,சக்கரம் ஆகியவை நன்கொடையாக வழங்கப்பட்டன.

இன்று ஏழுமலையானை வழிபட்ட பின் அந்த நிறுவனத்தின் சார்பில் ஏழுமலையான் கோவிலில் உள்ள ரங்கநாயகர் மண்டபத்தில் தங்கத்தால் செய்யப்பட்ட சங்கு, சக்கரம் ஆகியவை தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டன.


