தேனி அருகே தாடிச்சேரியில் திமுக சார்பில் மாபெரும் கபடி போட்டி: தங்கம் தமிழ்செல்வன் எம்.பி தொடங்கி வைத்தார்
தேனி அருகே தாடிச்சேரியில் திமுகவின் தேனி வடக்கு மாவட்டம் தேனி வடக்கு ஒன்றியம் சார்பாக திராவிட பொங்கல் சமூக நீதிக்கான திருவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மாபெரும் கபடி போட்டி நடைபெற்றது
இந்த கபடி போட்டியில் தாடிச்சேரி, சிவலிங்க நாயக்கன்பட்டி ,கோட்டூர் சீலையம்பட்டி மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட கபடி அணியினர் பங்கேற்றனர்.


இந்த விழாவின் இரண்டாம் நாள் கபடி போட்டியினை தேனி பாராளுமன்ற உறுப்பினரும் திமுகவின் தேனி வடக்கு மாவட்ட செயலாளருமாகிய தங்க தமிழ்ச்செல்வன் பங்கேற்று கபடி போட்டிகளை தொடங்கி வைத்தார்.தொடர்ந்து விளையாடிய கபடி வீரர்கள் ஆடுகளத்தில் சிறப்பான முறையில் விளையாடினார்கள்.
இந்தப் போட்டியில் சிறப்பான முறையில் மூன்றாம் இடம் பிடித்த கபடி அணியினருக்கு ரூபாய் 15,000 மற்றும் சுழல் கோப்பையும் இரண்டாம் இடம் பிடித்த கபடி அணியினருக்கு 20,000 மற்றும் சுழல் கோப்பையும், முதல் இடம் பிடித்த கபடி அணியினருக்கு ரூபாய் 25000 மற்றும் சுழல் கோப்பையும் தேனி வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் சக்கரவர்த்தி வழங்கி சிறப்பித்தார்..


மேலும் இந்த நிகழ்வில் தேனி வடக்கு ஒன்றிய விவசாய அமைப்பாளர் ரவி, கிளை செயலாளர்கள் தவசி, பாக்கியம், தேனி வடக்கு ஒன்றிய மீனவர் அணி அமைப்பாளர் போத்திராஜ் ,தேனி வடக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் முருக ஜெகதீஸ் ,ஆதிதிராவிட நல குழு அணி அமைப்பாளர் பால்ராஜ் ,தேனி வடக்கு ஒன்றிய விளையாட்டு மேம்பட்டிய அணி துணை அமைப்பாளர் தமிழரசன் திமுக பிரதிநிதிகள் சூரத் தேவன், ராஜவேல் சுரேஷ் மற்றும் திமுக நிர்வாகிகள்,விளையாட்டு வீரர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.
மேலும் இந்த விழாவிற்கு வருகை புரிந்த பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வனுக்கு தேனீ வடக்கு ஒன்றியம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது
