மயிலாடுதுறையில் திமுக மாவட்ட மகளிரணி மற்றும் மகளிர் தொண்டரணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
தஞ்சாவூரில் ஜன.26-ஆம் தேதி நடைபெறவுள்ள ‘வெல்லும் தமிழ் பெண்கள்’ டெல்டா மண்டல மகளிர் அணி மாநாட்டில் மயிலாடுதுறையில் இருந்து மகளிர் பெருந்திரளாக பங்கேற்பது குறித்து மயிலாடுதுறையில் திமுக மாவட்ட மகளிரணி மற்றும் மகளிர் தொண்டரணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

திமுக மாவட்ட செயலாளர் நிவேதா எம்.முருகன் எம்எல்ஏ தலைமை வகித்து, தமிழ்நாடு முதலமைச்சரின் மகளிர் மேம்பாட்டு திட்டங்களை விளக்கிப் பேசினார்..
இதில்,திமுக மாநில பிரசார குழு செயலாளர்கள் ராணி ரவிச்சந்திரன்,தேன்மொழி,திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் குத்தாலம் பி.கல்யாணம், சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.இதில், திமுக மகளிரணியினர் மற்றும் திமுக நிர்வாகிகள் 500-க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


