10.வது 12.வது வகுப்பில் 100/100 மதிப்பெண் பெற்ற,பள்ளிகளுக்கும்,பள்ளி ஆசிரியர்களுக்கும் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மன்னம்பந்தலில் உள்ள தனியார் கல்லூரியில் கடந்த கல்வி ஆண்டில் 100 / 100 தேர்வு சதவிதம் தேர்ச்சி அடைந்த பள்ளிகளுக்கும் தேர்ச்சி பெற வைத்த ஆசிரியர்களுக்கும் மாவட்ட பள்ளி கல்வித்துறை மூலம் பாராட்டு விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகேயன் தலைமை வகித்தார்,மாவட்ட கல்வி அலுவலர் சாந்தி முன்னிலை வகித்தார்,நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மாவட்ட ஆட்சி தலைவர் ஸ்ரீகாந்த் கடந்த வருடம் கல்வி ஆண்டில் இந்த மாவட்டத்தை மாநில அளவில் 23வது இடத்தை பிடித்த நாம் இந்த ஆண்டு முதலிடத்தை பிடிக்க வேண்டும் என கூறி மாவட்டத்தின் பெருமையை மாநில அளவில் உயர்த்திய பள்ளி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நன்றியும், வாழ்த்துக்களும் தெரிவித்தார் .
இந்நிகழ்ச்சியில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்களும்,ஆசிரியர்களும் பெருமளவில் கலந்து கொண்டனர் நிறைவாக முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் முத்துகனியன் நன்றி கூறினார்.

