திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு சாலை பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்
தீபத்திற்கு முன்னதாகவே பணிகளை முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவு..
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அண்ணாமலையார் கோவிலுக்கு அனுதினமும் ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர்.
திருவண்ணாமலைக்கு வருவதற்கு 9 சாலைகள் உள்ளது. இந்த ஒன்பது சாலைகளும் தற்போது விரிவாக்கப்பட்டு வருகிறது. தீபத் திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு சிரமமின்றி வந்து செல்ல இந்த ஒன்பது சாலைகளும் சரி செய்யப்பட்டு வருகிறது. இதுமட்டுமின்றி திருவண்ணாமலை நகருக்குள் உள்ள முக்கிய வீதிகளிலும் சாலை பணிகள் மற்றும் கால்வாய் பணிகளும் நடைபெற்று வருகிறது.
சாலை விரிவாக்கம் பணிகள் மற்றும் கால்வாய் பணிகளை உடனடியாக முடிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் இன்று ஆய்வு மேற்கொண்டார். முக்கிய வீதிகளில் அவலூர்பேட்டை சாலை, பெரியார் சிலை, தேரடி வீதி, கிரிவலப் பாதை போன்ற சாலைகளில் நடைபெற்று வரும் சாலை பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.

குறிப்பாக வருகிற டிசம்பர் 3ம் தேதி திருக்கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற உள்ளதால் அதற்குள்ளதாகவே இந்த பணிகளை முடிக்க வேண்டும் என்று அரசு அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.


