in

பேரிடர் மேலாண்மை மீட்பு ஒத்திகை

பேரிடர் மேலாண்மை மீட்பு ஒத்திகை

 

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே கோவிந்தநாட்டுச்சேரி ஊராட்சியில் பேரிடர் மேலாண்மை மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி ……

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா கோவிந்தநாட்டுச்சேரி ஊராட்சியில் பட்டுக்குடி கிராமத்தில் பருவ மழை கால காலங்களில் ஆற்றில் அதிக நீர் வரத்து இருக்கும் பொழுது பொது மக்கள் உயிர், உடைமைகளுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை, மீட்பு நடவடிக்கை போன்றவற்றை மேற்கொள்வது தொடர்பாக ஒத்திகை நிகழ்ச்சி தஞ்சை மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தல் படி அனைத்து துறைகளையும் இணைத்து தஞ்சை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலஅலுவலர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைப்பெற்றது.

இதில் வெள்ளப் பேரிடர் காலங்களில் பொதுமக்கள் உயிர் உடமைகளுக்கு பாதுகாப்பு ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மீட்பு நடவடிக்கை பற்றிய ஒத்திகையை தீயணைப்பு துறையினர் பொதுமக்கள் முன்பு மாதிரி ஒத்திகை நிகழ்ச்சி செய்து காட்டினார்.

இநிகழ்ச்சியில் வட்டாட்சியர் பழனிவேலு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவக்குமார் , விஜயலட்சுமி வேளாண்மை உதவி இயக்குனர் முகமது பாரூக், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜெய்சங்கர், மற்றும் காவல்துறையினர், தீயணைப்புத் துறையினர், மருத்துவத் துறையினர் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

What do you think?

பாபநாசத்தில் தென்னகப் பண்பாட்டு மையம் சார்பில் சலங்கை நாதம் நடன நிகழ்ச்சி

அரசு பள்ளிகளில் முதலிடம் பிடித்து 492 மதிப்பெண் பெற்ற கூலித் தொழிலாளி மகள் சாதனை