பரியேறும் பெருமாளை மிஸ் பண்ண அதர்வா… வருத்தப்பட்ட இயக்குனர் மாரி செல்வராஜ்
இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் நடிகர்கள் அதர்வா முரளி மற்றும் நிமிஷா சஜயன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் டிஎன்ஏ படத்தின் டிரெய்லர் நேற்று வெளியாகியுள்ளது.
ஜூன் 20 ஆம் தேதி வெளியாகும் இப்படத்தை மான்ஸ்டர் மற்றும் ஃபர்ஹானா போன்ற படங்கலுக்கு பெயர் பெற்ற வெங்கடேசன், மற்றொரு உணர்ச்சிபூர்வமான படத்தைச் கொடுத்துள்ளார். (அதர்வா) மற்றும் (நிமிஷா) தம்பதியினருக்கு திருமணத்திற்கு பிறகு குழந்தை பிறந்த பின் நிமிஷா மனநலப் பிரச்சினைகளை எதிர்கொள்வதால் குடும்ப அழுத்தங்கள் காரணமாக அவர்களின் அமைதியான வாழ்க்கை தலைகீழாக மாறுகிறது.
இவர்களுடன் பாலாஜி சக்திவேல், ரமேஷ் திலக், விஜி சந்திரசேகர், ரித்விகா கேபி மற்றும் பலர் நடித்துள்ளனர். dna ஆடியோ லாஞ்ச…இல் கலந்து கொண்டு பேசிய இயக்குனர் மாரி செல்வராஜ் அதர்வாவிற்கு ஞாபகம் இருக்கிறதா என்று எனக்கு தெரியவில்லை பரியேறும் பெருமாள் படத்தின் ஸ்கிரிப்ட் டை நான் முதலில் அதர்வாவிடம் தான் கூறினேன் ஆனால் அவர் பிசியாக பிஸியாக இருந்ததால் அந்த படத்தில் நடிக்க முடியவில்லை அவர் நடிக்காமல் போனதற்கு நான் மிகவும் வருத்தப்பட்டேன் என்றார்.. அதர்வா..வோ பரியேறும் பெருமாள்படத்தில் நான் நடிக்காமல் போனதற்கு வருத்தபடவில்லை என்னை விட கதிர் அருமையாக நடித்திருக்கிறார். dna படத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் படத்தில் இடம்பெற்றுள்ள ஐந்து பாடல்களை ஐந்து இசையமைப்பாளர்கள் இசையமைத்துள்ளனர்


