in

டீசல் டேங்கர் லாரி மோதி நிலை தடுமாறி உருண்டு கவிழ்ந்து விபத்து

டீசல் டேங்கர் லாரி மோதி நிலை தடுமாறி உருண்டு கவிழ்ந்து விபத்து

 

திருவண்ணாமலை அருகே சாலையை கடந்த மூதாட்டி மீது டீசல் டேங்கர் லாரி மோதி நிலை தடுமாறி உருண்டு கவிழ்ந்து விபத்து….

விபத்தில் மூதாட்டி பரிதாப பலி…

டீசல் லாரியிலிருந்து வெளியேறிய டீசலை அப்பகுதி மக்கள் கேன் கேனாக முட்டி மோதி கொண்டு பிடித்துச் சென்றதால் பரபரப்பு….

சென்னையில் இருந்து டீசல் ஏற்றிக்கொண்டு திருவண்ணாமலை வழியாக திருச்சி நோக்கி சென்ற 14 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட டீசல் டேங்கர் லாரி திருவண்ணாமலை சென்னை தேசிய நெடுஞ்சாலை தென்அரசம்பட்டு கிராமம் அருகே வந்த போது அதே கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டி கனகாம்பரம் (70) சாலையை கடக்க முயன்ற போது டேங்கர் லாரி மூதாட்டி மீது மோதி சாலையில் உருண்டு சாலையோரம் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மூதாட்டி கனகாம்பரம் சம்பவ இடத்தில் பலியானார்.

மேலும் சாலையோரம் கவிழ்ந்த டேங்கர் லாரியில் இருந்த டீசல் கீழே ஒழுகியதால் தகவல் அறிந்த‌ கிராம மக்கள் 25 லிட்டர் கேன், குடம், பக்கெட் உள்ளிட்ட கையில் கிடைத்த பாத்திரங்களில் வைத்து கொண்டு ஒருவருக்கொருவர் முண்டியடித்து முட்டி மோதிக் கொண்டு ஆபத்தை உணராமல் டீசலை பிடித்துச் சென்றனர்.

மேலும் அவ்வழியாக சென்ற நான்கு சக்கர வாகன ஓட்டுநர்கள் தங்களது வாகனங்களை சாலையில் நிறுத்திவிட்டு தாங்கள் வைத்திருந்த கேன்களில் டீசலை பிடித்து எடுத்து சென்றனர்.

பின்னர் கவிழ்ந்தது டீசல் லாரி மூலம் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் என்பதால் காவல் துறையினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்து சம்பவ இடத்திற்கு வரவழைத்து உள்ளனர். மேலும் பாதுகாப்பு பணிக்காக பத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

 

அதுமட்டுமல்லாமல் இறந்த மூதாட்டி கனகாம்பரத்த் உடலை ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதத்திற்காக அனுப்பி வைத்துள்ளனர்.

திருவண்ணாமலை அருகே ஏற்பட்ட 14 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட டேங்கர் லாரி விபத்தால் திருவண்ணாமலை திண்டிவனம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

What do you think?

ரஜினிக்குப் பிடிக்கிற வரை கதை கேட்பேன்

கனமழை மற்றும் கடல் சீற்றம் காரணமாக தரங்கம்பாடி டேனிஷ் கோட்டையில் மண் அரிப்பு