in

தஞ்சையில் இன்று தண்டவாளத்தில் முதியவர் பிணம் ரெயிலில் அடிப்பட்டு இறந்தாரா…?

தஞ்சையில் இன்று தண்டவாளத்தில் முதியவர் பிணம் ரெயிலில் அடிப்பட்டு இறந்தாரா?… போலீசார் விசாரணை

தஞ்சாவூர்- திட்டைக்கு இடைப்பட்ட ரெயில்வே தண்டவாளத்தில் இன்று காலை 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பிணமாக கிடந்தார். இதனை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து தஞ்சை இருப்புப்பாதை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கதிர்வேல் தலைமையில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர்கள் விநாயகமூர்த்தி, இசையரசன் , தனிப்பிரிவு சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை பார்வையிட்டு விசாரித்தனர்.

ஆனால் அவர் யார் ? எந்த ஊர் ? என்ற விவரம் தெரியவில்லை. இதையடுத்து முதியவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தண்டவாளத்தை கடக்க முயலும் போது ரெயிலில் அடிபட்டு முதியவர் இறந்தாரா ? அல்லது ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா ? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்

What do you think?

செங்கம் அருகே இரண்டு குழந்தைகளுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை

மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோயிலில் விழுப்புரம் மாவட்ட சரக டிஐஜி ஆய்வு