லண்டன் ரசிகரின் போனை பறித்தாரா? நடிகர் அக்ஷய் குமார்
பிரபலங்களுடன் ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக் கொள்ள ஆசைப்படுவது உண்டு.
டென்ஷனான சில செலிபிரிட்டிஸ் ரசிகர்களிடம் கடுமையாக நடந்து கொண்ட கதைகளும் உண்டு.
சமீபத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் லண்டன் சென்றிருந்தார் அங்கே தன்னை தொடர்ந்து வந்து வீடியோ எடுக்க முயன்ற ரசிகரின் செல்போனை பறித்திருக்கிறார்.
இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளத்தில் வெளியாகி அக்ஷய் குமார் எதிராக கண்டனங்கள் வலுக்கிறது.
ஒரு சிலர் ரசிகர் செய்தது தவறு என்றும் ஒரு சிலர் புகைப்படம் எடுப்பதில் தவறென்னும் இல்லை என்று கருத்து வெளியான நிலையில் புகைப்படம் எடுக்க முயன்ற அந்த ரசிகரை தற்பொழுது அதற்கான விளக்கத்தை கொடுத்திருக்கிறார்.
நான் ஆக்ஸ்போர்ட் தெருவில் உள்ள சிக்னலில் நின்று கொண்டிருந்தபோது அக்ஷய் குமாரை போலவே ஒருவர் சென்றார் அவர் தானா என்று உறுதி செய்து கொள்வதற்காக நான் அவரை பின்தொடர்ந்தேன் வீடியோவும் எடுக்க தொடங்கினேன் அவருக்கு முன்னால் சென்று வீடியோ எடுக்கும் பொழுது அனுமதி இன்றி புகைப்படம் எடுப்பது தவறு என்று கூறி என் கையை பிடித்தார் நானும் அனுமதி இன்றி இன்னொருவர் கையை தொடுவது தவறு என்று கூறினேன்.
நான் தொட்டது பிரெண்ட்லி டச் நான் தற்பொழுது பிஸியாக இருக்கிறேன் நண்பா என்னை தொந்தரவு செய்யாதே என்று கூறிவிட்டு கிளம்பினார்.
அவர் செல்போனை பிடுங்கவில்லை தட்டி விடவும் இல்லை அவர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை பிறகு அவரே என்னுடன் வந்து செல்பி எடுத்து கொண்டார் என்று விளக்கம் கொடுத்திருக்கிறார்.


