தமிழக அரசை வலியுறுத்தி தர்ணா போராட்டம்
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் ஊராட்சி செயலர்களின் அடிப்படை கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி தர்ணா போராட்டம்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் ஊராட்சி செயலர்களின் அடிப்படை கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் தர்ணா போராட்டம் நடைபெற்றுவருகிறது.

அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வாயிலில் மாவட்ட தலைவர் ஜெயராமன் தலைமையில் ஊராட்சி செயலர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கல் ஊராட்சி செயலர்களுக்கு சிறப்பு நிலை, தேர்வு நிலை,பணப்பயன் வழங்கிடவும்
ஊராட்சி செயலாளராக பணிபுரிந்து 1996க்கு பிறகு இளநிலை உதவியாளராக பணியாற்றுபவர்களுக்கு ஊராட்சி செயலர் பணிக்காலத்தில் 50 சதவீதம் பணிக்காலத்தை ஓய்வூதியத்திற்கு எடுத்துக்கொள்ள அரசாணை பிறப்பிக்க கோருதல் உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 300க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வாயிலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


