in

கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் தானிய லட்சுமி பூஜை

கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் தானிய லட்சுமி பூஜை

 

புவனகிரி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் தானிய லட்சுமி பூஜை மற்றும் கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது

மூலவர் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பு

கடலூர் மாவட்டம் புவனகிரி கடை வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் ஆடி மாத மூன்றாவது வெள்ளிக்கிழமையும் முன்னிட்டு ஆலயத்தில் தானிய லட்சுமி பூஜை மற்றும் கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது.

விழாவினை முன்னிட்டு ஆலயத்தில் உள்ள மூலவர் கன்னிகா பரமேஸ்வரி அம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியகளால் அபிஷேகம் செய்யப்பட்டு தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

தொடர்ந்து நவதானியங்களை கோலங்களாக அலங்கரித்து சகல செல்வங்களும் ஐஸ்வர்யங்களும் வேண்டி பெண்கள் கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து தங்க கவச அலங்காரத்தில் காட்சியளித்த கன்னிகா பரமேஸ்வரி அம்மனுக்கு மகா தீபாரதனை காட்டப்பட்டது.

விழாவில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர் தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் அன்னதானம் வழங்கப்பட்டது.

What do you think?

நடிகர் கலாபவன் நவாஸ் ஹோட்டல் அறையில் இறந்து கிடந்தார்

சிறந்த படத்திற்கான தேசிய விருதை தட்டி சென்ற பார்கிங்