மறுபடியும் கல்யாணம் பண்ணிக்கிற ஐடியா தனுஷுக்கு இல்லை
நாளைக்கு உலகமே காதலர் தினத்தை (Valentine’s Day) கொண்டாட ரெடியாகிட்டு இருக்கு. ஒரு பக்கம் 90ஸ் கிட்ஸ் “எங்களுக்கு நாளைக்கு வெறும் சனிக்கிழமை தான்”னு மீம்ஸ் போட்டுட்டு இருக்க, இன்னொரு பக்கம் சோஷியல் மீடியால தனுஷ் – மிருணாள் தாகூர் கல்யாணப் பேச்சு தான் பயங்கர ஹாட் டாபிக்.
தனுஷும் பாலிவுட் பியூட்டி மிருணாள் தாகூரும் காதலிக்கிறாங்கன்னும், நாளைக்கு (பிப்ரவரி 14) அவங்களுக்கு கல்யாணம் நடக்கப்போகுதுன்னும் ஒரு செய்தி காட்டுத்தீயா பரவுச்சு.
இத்தனை நாளா அமைதியா இருந்த மிருணாள், இப்போ அவரோட புதுப் பட ப்ரோமோஷன்ல இதுக்கு ஒரு எண்ட் கார்டு போட்டுருக்காரு.
“நாளைக்கு எனக்கு கல்யாணம்லாம் இல்லைங்க. அப்படி நம்புறவங்களுக்கு நாளைக்கு காதலர் தினம் இல்ல, முட்டாள்கள் தினமா (April Fool’s Day மாதிரி) தான் அமையப்போகுது”னு சிரிச்சுக்கிட்டே சொல்லிருக்காரு.
நாளைக்கு கல்யாணம் இல்லன்னு தான் சொல்லிருக்காரு, ஆனா தனுஷை காதலிக்கலன்னு சொல்லலையே!”னு புது அர்த்தம் கண்டுபிடிச்சு கிளப்பி விட்டுட்டு இருக்காங்க.
அதுவும் சமீபத்துல ஒரு பேட்டியில ‘சென்னைவாலா’ (Chennai-wala) பத்தி பேச்சு வந்தப்போ மிருணாள் வெட்கப்பட்டது, நெருப்பை இன்னும் அதிகமாக்கியிருக்கு!
மறுபக்கம் தனுஷ் தரப்புல இருந்து வர்ற தகவல்கள் வேற மாதிரி இருக்கு: ஐஸ்வர்யா கூட விவாகரத்து ஆனதுக்கு அப்புறம், மறுபடியும் கல்யாணம் பண்ணிக்கிற ஐடியா தனுஷுக்கு இல்லையாம்.
யாத்ரா, லிங்கா ரெண்டு பேரும் வளர்ந்துட்டாங்க. அவங்களுக்கு ஒரு ‘சித்தி’யை கொண்டு வர தனுஷுக்கு துளி கூட விருப்பம் இல்லைன்னு சொல்லப்படுது.
தனுஷோட மூத்த மகன் யாத்ராவை சீக்கிரமே ஹீரோவா அறிமுகப்படுத்தப் போறாங்களாம். சின்னவர் லிங்காவும் வீடியோ எடுக்கிறதுல பயங்கர கில்லாடியாம்!
Watch – YouTube Click
Shorts


