நாமக்கல் சக்கரை பட்டி சித்தர் ஆலயத்தில் புரட்டாசி பெளர்ணமி பூஜை பக்தர்கள் வழிபாடு
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே உள்ள கோப்பணம் பாளையத்தில் உள்ள சதானந்த சித்தர் என்கிற சக்கரப்பட்டி சித்தர் ஆலயத்தில் புரட்டாசி மாத பௌர்ணமியினை முன்னிட்டு சிறப்பு யாகம் கலச அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
விழாவின் நிகழ்வாக சக்கரப்பட்டி சித்தர் ஆலயத்தில் கலசம் வைக்கப்பட்டு யாக வேள்விகள் நடைபெற்று பூர்ணகுதி சமர்ப்பிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கலசம் ஆலயத்தை வலம் வந்து சக்கரப்பட்டி சித்தருக்கு கலச அபிஷேகம் செய்தனர். அதனைத் தொடர்ந்து சக்கரப்பட்டி சித்தருக்கு நாமாவளிகல் கூறி உதிரிப்பூக்களினால் அர்ச்சனை செய்து பஞ்சாரத்தி மற்றும் ஏகாரத்தி காண்பிக்கப்பட்டது.

விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் தீர்த்தம் தெளிக்கப்பட்டு விபூதி பிரசாதம் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆலயத்தில் அன்னதானம் நடைபெற்றது.


