பழனி முருகன் கோவிலில் படி பூஜை செய்த பக்தர்கள்- வண்ண மலர்களால் அலங்கரித்து மலர் வழிபாடு
பழனி முருகன் கோவிலில் படி பூஜை செய்த பக்தர்கள்- வண்ண மலர்களால் அலங்கரித்து மலர் வழிபாட்டிலும் ஈடுபட்டனர்.

திண்டுக்கல் மாவட்டம் 41பழனி முருகன் கோயில் தைப்பூசத் திருவிழா நிறைவடைந்த நிலையில் பக்தர்கள் வருகை இருந்துவருகிறது. சேலம் மாவட்டம் எடப்பாடியில் இருந்து பழனிக்கு பாதயாத்திரை ஆக வந்துள்ள பருவத ராஜகுல சமூகத்தைச் சேர்ந்த மக்கள் பழனி கோயிலில் வழிபாட்டில் ஈடுபட்டனர்.
மலைக் கோயிலுக்கு செல்லும் படிப்பாதையில் கோலம் வரைந்து தேங்காய், பழம், பொங்கல் வைத்து முருகனைப் போற்றி பாடல்களை பாடி படி பூஜை செய்து வழிபட்டனர். தொடர்ந்து மலைமீது வெளிபிரகாரத்தில் பிச்சிபூ , சம்மங்கி, மரிகொழுந்து, வாடாமல்லி உள்ளிட்ட பல்வேறு வண்ண மலர்களைக் கொண்டு ஓம் வடிவில் வரைந்து மலர் வழிபாடும் செய்தனர்.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை வழிபட்டனர். பழனி தைப்பூச திருவிழாவிற்கு வரும் எடப்பாடியைச் சேர்ந்த பர்வதராஜகுல சமூக மக்களை மலை மீது ஒரு நாள் தங்கு அனுமதித்து சாமி தரிசனம் செய்ய கோயில் நிர்வாகம் அனுமதிப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழக முழுவதும் இருந்து பர்வத ராஜகுல சமூகத்தைச் சார்ந்தவர்கள் இன்று சாமி தரிசனம் செய்ய சுமார் 50,000க்கும் மேற்பட்டோர் பழனிக்கு வருகை தந்துள்ளனர். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோயில் நிர்வாகம் செய்துள்ளது.


