in

அருள்மிகு முத்தாலம்மன் திருவிழா அக்னிசட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

அருள்மிகு முத்தாலம்மன் திருவிழா அக்னிசட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

 

நாமக்கல் மேலபேட்டபாளையம் – அருள்மிகு முத்தாலம்மன் திருவிழாவை முன்னிட்டு அக்னிசட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்.

நாமக்கல் மாவட்டம் மணப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட மேலபேட்டபாளையத்தில் அருள்தரும் அம்பிகையாக திகழும் அருள்மிகு முத்தாலம்மன் , அருள்மிகு சந்தியப்பன், அருள்மிகு காளியம்மன் ஆலய ஆவணி மாத திருவிழாவை முன்னிட்டு 31-8- 2025 ஞாயிற்றுக்கிழமை இரவு வடிச்சோரு, நிகழவுடன் துவங்கியது.

திங்கள் காலை பக்தர்கள் அக்னி சட்டி எடுத்தல், தீர்த்த குடம் பால்குடம், உள்ளிட்ட பல்வேறு வேண்டுதல்களை நிறைவேற்றும் விதமாக மேல பேட்டை பாளையம் காவிரி ஆற்றில் புனித நீராடி அங்கிருந்துஅக்னி சட்டியை கைகளில் சுமந்தவாறு பல்வேறு வீதிகள் வழியாக திருக்கோயிலை வந்தடைந்தனர்.

அப்போது மூலவர் அருள்மிகு முத்தாலம்மன் தங்க கவசத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் அப்போது கற்புற மஹா தீபம் காண்பிக்கப்பட்டது இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் மாலை அக்னி குண்டத்தில் பத்தர்கள் இறங்கும் நிகழ்வும் ,நாளை செப்டம்பர் 2 கிடா வெட்டுதலும் மாலை மாவிளக்கு பூஜையும், செப்டம்பர் மூன்றாம் தேதி மஞ்சள் நீராட்டுடன் திருவிழா இனிதே நிறைவு பெறுகிறது…

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மிகச் சிறப்பாக செய்து வருகின்றது

What do you think?

யோகி பாபுவை கேவலப்படுத்திய தொகுப்பாளனி பாவனா… வலுக்கும் கண்டனம்

கணவன் மனைவி ஆகிய இரண்டு பேருக்கும் ஆயுள் தண்டனை