in

ஆடி மாத அமாவாசையை முன்னிட்டு வேலப்பர் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம்

ஆடி மாத அமாவாசையை முன்னிட்டு வேலப்பர் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம்

 

ஆடி மாத அமாவாசையை முன்னிட்டு ஆண்டிப்பட்டி அருகே நூறாண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த உள்ள வேலப்பர் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம்

வெள்ளிக்க கவச அலங்காரத்தில் சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்த மாவூற்று வேலப்பரை ஏராளமான பொதுமக்கள் தரிசித்துச் சென்றனர்.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் நூற்றாண்டுகள் பழமையான மாவூற்று வேலப்பர் திருக்கோயில் அமைந்துள்ளது.

இயற்கை எழில் கொஞ்சும் பகுதியில் அமைந்துள்ள இந்த கோவில் இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்த கோவிலில் இன்று ஆடி மாத அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வரும் தட்டு சாமி தரிசனம் செய்தனர்.

கோவில் அருகே மருதமரத்தடியில் இருந்த வழிந்து வரும் வற்றாத ஊற்றில் பக்தர்கள் குளித்தனர்.

மாவூற்று வேலப்பருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டது.

வண்ணமலர் மாலைகளாலும் வெள்ளி கவசத்தால் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந்த மாவுற்று வேலப்பருக்கு தீபாராதனை காட்டப்பட்டது.

ஆடி அமாவாசை முன்னிட்டு வெள்ளிக்கவசம் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்த மாற்று வேலப்பரை தரிசிக்க தேனி மாவட்டத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வருகை தந்து தரிசனம் செய்து சென்றனர்.

What do you think?

தமிழ்நாடு அரசு தான் போக்குவரத்து துறைக்கு நிதி ஒதுக்குவதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

ஆடி அமாவாசை தினம் மோகனூர் காவிரி ஆற்றில் முன்னோர்களுக்கு ஏராளமானோர் தர்ப்பணம்