in

புனித நீர் ஊற்றிய போது வட்டமிட்ட இரண்டு கருட பகவான்கள் கரகோஷம் எழுப்பி வணங்கிய பக்தர்கள்

 புனித நீர் ஊற்றிய போது வட்டமிட்ட இரண்டு கருட பகவான்கள் கரகோஷம் எழுப்பி வணங்கிய பக்தர்கள்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் மெயின் ரோட்டில் அமைந்துள்ள கலைமகள் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மற்றும் கலைமகள் கல்லூரி ஆகிய கல்வி நிறுவனங்களின் வளாகங்களில் அமைந்துள்ள அருள்மிகு ஆனந்த விநாயகர் கோவில் மற்றும் அருள்மிகு கலைமகள் கல்வி திருக்கோவில் இரண்டு கோவில்களுக்கும் இன்று கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது .

முன்னதாக சிறப்பு பூஜைகளுடன் புனித நீர் அடங்கிய கலசங்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு மந்திரங்கள் முழங்க கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது 12 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற கும்பாபிஷேகத்தை ஏராளமான பொதுமக்கள் மாணவர்கள் கண்டு தரிசனம் செய்தனர் .

அப்பொழுது கோபுர கலசத்தின் மீது புனித நீர் ஊற்றிய பொழுது வானில் இரண்டு கருட பகவான்கள் வட்டமிட்டு சுற்றி வந்தது கலசத்திற்கும் மிக அருகில் கருட பகவான்கள் வட்டமிட்ட தருணம் பக்தர்கள் மாணவர்கள் கரகோஷம் எழுப்பி வணங்கினர்

பின்னர் தீபாராதனை காண்பிக்கப்பட்டு பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது கோவில் நிர்வாகத்தின் சார்பில் கும்பாபிஷேகம் மிக சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

What do you think?

விஜய் சேதுபதி! ‘காந்தி டாக்ஸ்’ அனல் பறக்குது! பேசா மொழி படம்!! ஒரு புது முயற்சி! இதயம் பேசும் மொழி

சிதம்பரத்தில் நந்தனார் ஆலயம், சௌந்தரநாயகி உடனுறை சிவலோகநாதர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது