in

தீவனூர் ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் ஆலய பிரம்மோற்சவம்

தீவனூர் ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் ஆலய பிரம்மோற்சவம்

 

தீவனூர் ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் ஆலய பிரம்மோற்சவம்
6-ம் நாள் இரவு கஜ வாகனத்தில் இரவு விதி உலா நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் தீவனூர் ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் ஆலய பிரம்மோற்சவம் 6-ம் நாளை முன்னிட்டு ஸ்ரீ லஷ்மி நாராயண பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த ஸ்ரீ லக்ஷ்மி நாராயண பெருமாளுக்கு மகாதீபாரதனை நட்சத்திர தீபம் கும்ப தீபம் சத்திரங்கள் கொண்டு சோட ச உபச்சாரம் மற்றும் பஞ்சமுக தீபாராதனை கற்பூர ஆர்த்தி காண்பிக்கப்பட்டது.

தொடர்ந்து ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் கோயில் உட்பிரகாரம் வலம் வந்து கஜ வாகனத்தில் பத்ர்களுக்கு காட்சியளித்தார்.

மேலும் கஜ வாகனத்தில் காட்சியளித்த ஸ்ரீ லக்ஷ்மி நாராயண பெருமாள் அவர்களுக்கு பஞ்சமுகத்தி பாரதனை கற்பூர ஆர்த்தி காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து இரவு வீதி உலா நடைபெற்றது.

What do you think?

திண்டிவனத்தில் பக்ரீத் பண்டிகை இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை

அட்லீ இயக்கத்தில் மீண்டும் நடிக்கும் தீபிகா படுகோனே