அட்லீ இயக்கத்தில் மீண்டும் நடிக்கும் தீபிகா படுகோனே
அட்லீ இயக்கும் அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தின் நாயகியாக தீபிகா படுகோனே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இயக்குனர் அட்லீயுடன் அல்லு அர்ஜுன் நடிக்கும் படம் டோலிவுட்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாகும்.
படத்தின்நாயகி யார் என்று பல நாட்களாக வாய் திறக்காமல் இருந்த தயாரிப்பாளர்கள், தீபிகா படுகோனே கதாநாயகியாக நடிப்பதாக அறிவித்தனர்.
அட்லீ பாலிவுட்டில் இயக்குனரான அறிமுகமான ஜவான் (2023) படத்தில் தீபிகா படுகோன் முக்கிய வேடத்தில் நடித்தார்.
மேலும் முதல் முறையாக அல்லு அர்ஜுனுடன் நடிக்கிறார். பிரபாஸின் கல்கி 2898 AD க்குப் பிறகு அவரின் இரண்டாவது தெலுங்கு படம்.
தற்காலிகமாக AA22xA6 என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம், பிளாக்பஸ்டர் படமான புஷ்பா 2-க்குப் பிறகு அல்லு அர்ஜுன் நடிக்கிறார்.
ஏப்ரல் 8 அன்று அல்லு அர்ஜுனின் 43-வது பிறந்தநாளில் இந்தப் படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ், “மாஸ் வித் மேஜிக் & கற்பனைக்கு அப்பாற்பட்ட உலகம்! #AA22.
Sun Pictures இன் இணையற்ற ஆதரவுடன் உண்மையிலேயே அற்புதமான ஒன்றுக்காக @Atlee காருவுடன் இணைகிறோம்” என்று பட அறிவிப்புப் பதிவைப் பகிர்ந்து கொண்டது.