டிடி நெக்ஸ்ட் லெவல் டிரெய்லர் அவுட்
டிடி நெக்ஸ்ட் லெவல் டிரெய்லர் நேற்று வெளியிடப்பட்டது. பிரேம் ஆனந்த் இயக்கியுள்ள நகைசுவை நிறைந்த பொழுதுபோக்கு திரைப்படம்.
மே 16 ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டிருந்த இந்த படத்தின் டிரெய்லரை தயாரிப்பாளர்களுடன் நடிகர் சிலம்பரசன் புதன்கிழமை(நேற்று) சமூக ஊடகங்களில் வெளியிட்டார்.
டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல் படத்தின் டிரெய்லரில், சந்தானம் ஒரு திரைப்பட விமர்சகராக வருகிறார். அவர் ஒரு தீவில் பேய்களிடம் மாட்டி கொள்கிறார்.
செல்வராகவன் பேய்..யாக நடிக்கிறார், செல்வராகவன், விமர்சனம் என்ற பெயரில் படங்களை கேலி செய்ததற்காக சந்தானத்தை பழிவாங்குவது போல் தெரிகிறது.
சந்தானம் தனது தொழிலை விட்டுவிட்டால் மட்டுமே அவரை விடுவிக்க ஒப்புக்கொள்கிறார் செல்வராகவன். இருப்பினும், சந்தானம் பேயை வெல்லவும், மற்ற ஆவிகளுடன் போராடவும் முயற்சிக்கிறார்.
பேய்களிடம் இருந்து தப்பித்தாரா சந்தானம் என்பதே மீதி கதை கீதிகா, யாஷிகா ஆனந்த், மாறன், நிழல்கள் ரவி, கஸ்தூரி சங்கர் , Gautham வாசுதேவன் மற்றும் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.