டிடி நெக்ஸ்ட் லெவல் பாடல் முழுமையாக படத்தில் இருந்து நீக்கம்
நடிகர் சந்தானத்தின் படமான டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் கிஸ்ஸா 47 பாடலில் உள்ள ஆட்சேபனைக்குரிய பாடல் வரிகலை நீக்கும் படி சர்ச்சை எழுந்தது.
இந்தப் பாடல் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தால் கடுமையாக எதிர்க்கபட்டது, மேலும் “மத உணர்வுகளைப் புண்படுத்தியதற்காக” படகுழுவிடமிருந்து ₹100 கோடி இழப்பீடு கோரியுள்ளது.
கடுமையான கண்டனங்கள் மற்றும் அச்சுறுத்தல்களுக்குப் பிறகு, தயாரிப்பாளர்கள் பாடலின் சர்ச்சைக்குரிய பகுதியை நீக்கியுள்ளனர், மேலும் சந்தானம் மன்னிப்பு கேட்டு தனது பதிவை வெளியிட்டார் கிஸ்ஸா 47 என்ற ராப் பாடலில், “ஸ்ரீனிவாசா கோவிந்தா… கோவிந்தா ஹரி கோவிந்தா” (வெங்கடேஸ்வரரைக் குறிக்கிறது) வரிகள் உள்ளன.
படத்தின் கதாநாயகன் “கோவிந்தா” என்ற வார்த்தையை இழிவான முறையில் பயன்படுத்துகிறார் என்று டிடிடி உறுப்பினர் பானுபிரகாஷ் ரெட்டி தெரிவித்துள்ளார்.
இந்தப் பாடலின் வீடியோ ஏற்கனவே யூடியூப் மற்றும் பிற சமூக ஊடக தளங்களில் பரவி சர்ச்சையை அதிகரித்தது. பாஜகவின் தமிழ்நாடு பிரிவு ஏற்கனவே காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர், ஆட்சேபனைக்குரிய பாடல் அல்லது அதன் பகுதிகள் நீக்கப்படாவிட்டால் தணிக்கை வாரியத்தை அணுகுவோம் என்று புகார்களில் கூறப்பட்டுள்ளது.
மேலும் இப்படத்தினை ஆர்யாவுடன் இணைந்து தயாரிப்பாளர் நிகரிக்கா என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது. அந்த பாடலை நீக்காவிட்டால் தெலுங்கு தேசத்திலும் கடும் எதிர்ப்பு ஏற்படும் ஆந்திரா மற்றும் தெலுங்கில் ரிலீஸ் செய்ய முடியாது என்று சினிமா நண்பர்கள் கூற சிக்கல்களை கருத்தில் கொண்டு பாடல் முழுமையாக படத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது.
மேலும் இப் பாடல் நீக்கப்பட்டுள்ளதால் பல லட்சம் ரூபாய் நிறுவனத்திற்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.