ஓய்வு பெற்ற சிறப்பு உதவி காவல் ஆய்வாளரை கடித்த முதலை
சிதம்பரம் அருகே ஓய்வு பெற்ற சிறப்பு உதவி காவல் ஆய்வாளரை கடித்த முதலை, அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியவர் கையில் பலத்த காயத்துடன் மாவட்ட மருத்துவர் மருத்துவமனையில் அனுமதி.
சிதம்பரம் அருகே மெய்யாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் இவர் சிறப்பு உதவி காவல் ஆய்வாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற நிலையில் நேற்று மாலை தவர்தான்பட்டு கிராம பகுதியில் செல்லும் பழைய கொள்ளிடம் ஆற்றில் துணி துவைக்க சென்றுள்ளார், அப்போது மறைந்திருந்த முதலை ஒன்று அவரை பலமாக கையில் கடித்து இழுத்துச் செல்ல முயற்சி செய்துள்ளது.
அப்போது அதிர்ஷ்டவசமாக செல்வராஜ் முதலியிடமிருந்து தப்பித்து வெளியேறினார்.
முதலை தாக்கியதில் அவரது வலது கை பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

மேலும் அவர் அண்ணாமலை நகரில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவு சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் பழைய கொள்ளிடம் ஆற்றில் உள்ள முதலைகளை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை எழுந்துள்ளது.


