in

‘பாஸ்ட் எக்ஸ்: பார்ட் 2’ (Fast X: Part 2) நடிக்கப்போறார் கிறிஸ்டியானோ ரொனால்டோ

‘பாஸ்ட் எக்ஸ்: பார்ட் 2’ (Fast X: Part 2) நடிக்கப்போறார் கிறிஸ்டியானோ ரொனால்டோ

 

2001-ல ஆரம்பிச்ச இந்த ரேஸ் பயணம், இப்போ அதோட கடைசி கட்டத்தை எட்டியிருக்கு.

பல பாகங்கள் வந்து ஹிட் அடிச்ச இந்த சீரிஸ்ல, இப்போ ஒரு உலகளாவிய சூப்பர் ஸ்டார் என்ட்ரி கொடுக்கப்போறாரு.

இந்தப் படத்தோட கடைசி பாகமான ‘பாஸ்ட் எக்ஸ்: பார்ட் 2’ (Fast X: Part 2)-ல, கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ நடிக்கப்போறார்னு படக்குழு அதிகாரப்பூர்வமா அறிவிச்சிருக்காங்க.

ரொனால்டோ சூட்டிங் ஸ்பாட்ல இருக்குற மாதிரி ஒரு AI (செயற்கை நுண்ணறிவு) போட்டோவை ஷேர் பண்ணி, நடிகர் கிப்சன் அவரை வரவேற்றிருக்காரு. ரொனால்டோவுக்காகவே படத்துல ஒரு ஸ்பெஷல் கேரக்டர் எழுதியிருக்காங்களாம்.

இதைக் கேட்ட அவரோட ஃபேன்ஸ் இப்போ செம குஷியில இருக்காங்க.இந்தப் படம் வர்ற 2027 ஏப்ரல் மாசம் ரிலீஸ் ஆகும்னு எதிர்பார்க்கப்படுது.

வின் டீசல், ஜேசன் ஸ்டாதம்னு ஏற்கனவே ஒரு பெரிய பட்டாளமே இருக்குற இதுல, இப்போ ரொனால்டோவும் சேர்ந்திருக்கிறது படத்து மேல இருக்குற ஹைப்பை வேற லெவலுக்கு கொண்டு போயிருக்கு.

இதுல இன்னொரு சுவாரஸ்யமான மேட்டர் என்னன்னா, நம்ம தல அஜித் சமீபத்துல ஒரு பேட்டியில, “பாஸ்ட் அண்ட் பியூரியஸ், எப் 1 (F1) போன்ற ஹாலிவுட் படங்கள்ல நடிக்க வாய்ப்பு வந்தா கண்டிப்பா போவேன்”னு சொல்லியிருந்தாரு.

இப்போ ரொனால்டோ இந்தப் படத்துல இணைஞ்சிருக்கிறது, அஜித்தோட அந்த ஆசையை ரசிகர்கள் மத்தியில மறுபடியும் ஞாபகப்படுத்தியிருக்கு.

What do you think?

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில். வைகுண்டஏகாதசி பெருவிழா 2025 பகல் பத்து முதல் திருநாள்.

ஸ்ரீரங்கம் வைகுண்டஏகாதசி பெருவிழா 2025 பகல் பத்து இரண்டாம் திருநாள்