விருத்தாசலத்தில், அடிப்படை வசதிகள் செய்து தராத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலர் உள்ளிட்ட பொதுமக்கள் கைது.
கடலூர் மாவட்டம்,விருத்தாசலம் நகராட்சிக்குட்பட்ட 3வது வார்டு மாணிக்கவாசகர் நகர் பகுதியில் சாலை வசதி,முறையான குடிநீர் வசதி,கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து .

தர கோரி.நகராட்சி அலுவலகத்தில் பலமுறை கூறியும்,அப்பகுதி மக்களின் அடிப்படை கோரிக்கைகளை நிறைவேற்றி தராத நகராட்சி நிர்வாகத்தை கண்டிப்பதாக கூறி,அப்பகுதி கவுன்சிலர் வெங்கடேசன் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கு வந்த போலீசார் உண்ணவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போது..போராட்டத்தை கைவிடாததால்.அனுமதி இன்றி போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலர் உள்ளிட்ட அப்பகுதி பொதுமக்களை போலீசார் கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர் இச்ச சம்பவத்தால், அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


