in

புதுச்சேரி காவல்துறையில் உதவி ஆய்வாளர் பணிக்கு நடைபெற்ற உடற் தகுதி தேர்வு மற்றும் எழுத்து தேர்வில் ஊழல்

புதுச்சேரி காவல்துறையில் உதவி ஆய்வாளர் பணிக்கு நடைபெற்ற உடற் தகுதி தேர்வு மற்றும் எழுத்து தேர்வில் ஊழல்

புதுச்சேரியில் நடந்து முடிந்த உதவி ஆய்வாளர் பணிக்கு, ஆட்கள் தேர்வு செய்யப்படுவதற்காக தடை செய்யப்பட்ட ஒரு நிறுவனத்தை தேர்வு செய்ய அனுமதித்துள்ளார்கள்.

ஏற்கனவே வழக்கு விசாரணையில் உள்ள ஒரு நிறுவனத்தை வைத்து ஆட்களை தேர்வு செய்வது என்பது உள்நோக்கம் கொண்டது. இது விதிமுறையை மீறும் செயலாகும், தங்களுக்கு வேண்டியவர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்பதற்காக அவசர அவசரமாக எழுத்து தேர்வு நடைபெற்றுள்ளது.

இதில் ஊழல் முறைகேடு நடந்துள்ளது இதனை உடனடியாக ரத்து செய்து செய்துவிட்டு வெளிப்படைத்தன்மையோடு மறு தேர்வு நடத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

புதுச்சேரியில் இதுவரை மூன்று முறை காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை பாஜகவினர் தாக்க முயன்றுள்ளனர், இது தொடர்கதையாக உள்ளது, இதனை கண்டித்து பிஜேபி அலுவலகம் எதிரே காங்கிரஸ் கட்சி கொடியுடன் போராட்டம் செய்யும் போது, அவர்கள் தடியுடன் தங்களை தாக்க வந்தார்கள் இதிலிருந்து அவர்கள் ரவுடி கட்சி என்பது தெளிவாகியுள்ளது என்று தெரிவித்த நாராயணசாமி..

ராகுல் காந்தி உருவ பொம்மை எரிக்கப்பட்டதற்கு பிஜேபி காரர்களை கைது செய்யாமல் காங்கிரஸ்காரர்களை கைது செய்து காவல்துறை ஒருதலைபட்சமாக செயல்பட்டுள்ளது, பிஜேபி கட்சிக்கு சாதகமாக செயல்படுகிறது, பிஜேபியின் அராஜகத்திற்கு காவல்துறை துணை போகிறது என்று குற்றம் சாட்டினார்.

புதுச்சேரி மகளிர் காங்கிரஸ் தலைவியை பிஜேபி-யினர் தரைக் குறைவாக பேசி இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது, தனிப்பட்ட வாழ்க்கை என்பது வேறு அரசியல் என்பது வேறு, இந்த நாகரிகம் கூட தெரியாமல் பிஜேபி-யினர் தரந்தாழ்ந்து நடந்து கொள்வதாக விமர்சித்தார்.

What do you think?

தமிழ்நாடு கிக் பாக்ஸிங் அசோசியேஷன் சார்பில்  பயிற்சி முகாம் நடைபெற்றது

ஜகாத் பொருட்கள் & சிறப்பு தொகை