in

குக் வித் கோமாளி சீசன் 7 அமர்க்களமா ஆரம்பிக்கப் போகுது!

குக் வித் கோமாளி சீசன் 7 அமர்க்களமா ஆரம்பிக்கப் போகுது!

 

விஜய் டிவில மத்த எல்லா ஷோவையும் விட ‘குக் வித் கோமாளி’-க்கு எப்பவுமே ஒரு தனி மவுசு உண்டு.

6 சீசனைத் தாண்டி இப்போ 7-வது சீசன் ஆரம்பிக்கப் போகுது. ஆனா, இந்த முறை வர்ற அப்டேட்ஸ் எல்லாம் கேட்டா “என்னது.. இப்படி ஒரு சேஞ்சா?”னு நீங்களே ஷாக் ஆயிடுவீங்க! வெங்கடேஷ் பட் வெளியேறினதுல ஆரம்பிச்சு, மணிமேகலை – பிரியங்கா தேஷ்பாண்டே மோதல் வரைக்கும் போன சீசன் முழுக்க பஞ்சாயத்து தான்.

அதுவும் போதாதுன்னு, இப்போ இருக்குற ஜட்ஜ் மாதம்பட்டி ரங்கராஜ் மேல ஒரு பெண் ஆடை வடிவமைப்பாளர் கொடுத்த தனிப்பட்ட புகார்கள் சோசியல் மீடியாவுல பயங்கரமா வைரல் ஆச்சு.

இவ்வளவு குடைச்சல்களுக்கு நடுவுலயும், ஷோவோட கெத்து குறையாம இப்போ சீசன் 7-க்கான ப்ரோமோ ரிலீஸ் ஆகிடுச்சு! இந்த சீசன்ல இருக்குற மெயின் ட்விஸ்டே இதுதான்.

இதுவரைக்கும் தனியா வந்து சமைச்சவங்க, இந்த முறை தன்னோட நிஜ வாழ்க்கை ஜோடிகளோட (Real-life Couples) சேர்ந்து ஜோடிப் புறாவா வந்து சமைக்கப் போறாங்களாம்! “குக் வித் கோமாளி” இப்போ “கப்பிள்ஸ் வித் கோமாளி”யா மாறப்போகுது.

இது கண்டிப்பா ஷோவுல ரொமான்ஸையும், அதே சமயம் கணவன்-மனைவிக்குள்ள நடக்குற க்யூட் சண்டைகளையும் அதிகமாக்கும்னு எதிர்பார்க்கப்படுது. இன்னொரு செம அப்டேட் என்னன்னா, வழக்கமா “ஒரு குக் – ஒரு கோமாளி” தான் இருப்பாங்க.

ஆனா இந்த முறை “இரண்டு குக் – ஒரு கோமாளி” அப்படிங்கிற புது ஃபார்மட்டைக் கொண்டு வரப்போறாங்களாம். ஒரு கோமாளி ரெண்டு பேரை வச்சுக்கிட்டு எப்படி சமாளிக்கப் போறாருங்கிறது தான் இந்த சீசனோட பெரிய ஹைலைட்டே!

இந்த மாற்றத்தைப் பார்த்துட்டு நெட்டிசன்கள் ரெண்டா பிரிஞ்சுட்டாங்க. “புது முயற்சி சூப்பர், புதுசா இருக்கும்”னு ஒரு பக்கம் சொன்னாலும், “பழையபடி ஒரு குக் – ஒரு கோமாளி இருந்தாதான் லூட்டி அதிகமா இருக்கும்”னு ஒரு தரப்பு கமெண்ட் போட்டுட்டு இருக்காங்க.

எது எப்படியோ, சர்ச்சைகளை எல்லாம் ஓரம் தள்ளிட்டு புது கெட்டப்ல, புது ஸ்டைல்ல குக் வித் கோமாளி சீசன் 7 அமர்க்களமா ஆரம்பிக்கப் போகுது!

What do you think?

சினிமாவுக்கு குட்- பை? திரிஷாவின் ‘திடீர்’ முடிவு!”புது படம் வேண்டாம்! ரகசிய பிளான் என்ன?

அண்ணாவுக்கு நேரமே சரியில்லை! விஜய் ரசிகர்கள் செம அப்செட்..