குக் வித் Comali Contestants லிஸ்ட்
விஜய் டிவியில் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிகொண்டிருக்கும் பிக் பாஸ் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ரசிகர்களின் ஆதரவு எப்பொழுதும் உண்டு.
எத்தனை சீசன் வந்தாலும் ரசிகர்களும் சலிக்காமல் ஆதரவு கொடுப்பார்கள்.
புதிய சீசனுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், குக் வித் கோமாளி 6 போட்டியாளர்களைப் பற்றிய பரபரப்பு அதிகரித்து வருகிறது.
குக் வித் கோமாளி 6 நடிகர்கள் மீண்டும் பார்வையாளர்களை மகிழ்விக்கத் தயாராக உள்ளநிலையில் புதிய முகங்கலும் இந்த சீசனில் என்ட்ரி கொடுக்க இருகின்றனர்.
குக் வித் கோமாளி சீசன் 6 விரைவில் ஒளிபரப்பாகும் நிலையில் இந்த சீசனில் கோமாளியாக புகழ், கேபிஒய் சரத், ராமர், சுனிதா கோகோய், நஞ்சுண்டன், சர்ஜின் குமார், பூவையார், டோலி, குரைஷி மற்றும் பிக்க் பாஸ் சௌந்தர்யா கலமிறங்க இருக்கிறார்.
இணையத்தில் பரவி வரும் வதந்திகளின்படி, சீரகடிகா ஆசைகள் சீரியல் ஸ்ரீ தேவா CWC சீசன் 6 இன் போட்டியாளர்களில் ஒருவராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடுவர்களாக தாமு, மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் . “தி மேட் செஃப்” என்று செல்லப்பெயர் பெற்ற கௌஷிக் சங்கர் இந்த சீசனில் புதிய நடுவராக இணைகிறார்.
பல உணவு வகைகளில் 25 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்துடன், ஃபியூஷன் உணவுகள் மற்றும் பாரம்பரிய சமையல் குறிப்புகளில் புதுமையான அணுகுமுறைகளுக்கு பெயர் பெற்றவர்.
முன்பு மாஸ்டர்செஃப் இந்தியா – தமிழ் நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்தவர் ரக்ஷன் தொகுத்து வழங்குகிறார், மே நான்காம் தேதி இரவு 8 மணி முதல் குக் வித் கோமாளி சீசன் 6 ஒளிபரப்பாகிறது.