ஊராட்சி மன்ற தலைவர் & நெடுஞ்சாலைத்துறை அலட்சியத்தால் களக்காட்டூரில் தொடர் விபத்துகள்
சாலை ஆக்கிரமிப்பால் குருகலான சாலையில் அதிவேகமாக வந்த கார் மோதி தூக்கி வீசப்பட்டவர்,கால் முறிவு மற்றும் தலையில் பலத்த காயம், உயிருக்கு ஆபத்தான நிலை, சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு
காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் ஒன்றியம் களக்காட்டூரில் இருந்து உத்திரமேரூர் நெடுஞ்சாலையில் காலூர் செல்லும் கூட்ரோடு சந்திப்பு உள்ளது.
இந்த சாலையில் களக்காட்டூர் திமுக ஊராட்சி மன்ற தலைவர் அலட்சியத்தாலும், பணத்தைப் பெற்றுக் கொண்டு நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கடைகள் மற்றும் ஹோட்டல்கள் கட்டி உள்ளனர்.
மேலும் கடைகளின் வெளியே விடப்படும் வாகனங்கள் சாலையை பெருமளவு ஆக்கிரமித்துள்ளன. மேலும் நெடுஞ்சாலைத்துறை இதனைக் கண்டு கொள்ளாமல் மெத்தனப் போக்கில் இருந்ததாக கூறப்படுகின்றது.
இதனால் நெடுஞ்சாலையானது குறுகலாக உள்ள நிலையில் மாலை உத்திரமேரூரில் இருந்து 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் அதிவேகமாக ஒட்டி வந்த கார் களக்காட்டூரை நோக்கி எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த 75 வயது அண்ணாமலை என்ற முதியவர் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்டார்.
இதில் அவருக்கு கால் முறிவு,இடுப்பு எலும்பு உடைந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டு வாயிலிருந்து ரத்தம் நிற்காமல் வழிந்து ஆபத்தான நிலையில் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு 108 வாகனம் மூலம் அனுப்பினர்.
பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை மியாட் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் தற்போதைய ஆட்சியில் நெடுஞ்சாலை துறையின் அலட்சியம், திமுக ஊராட்சி மன்ற தலைவர் கையூட்டுப் பெற்றுக் கொண்டு கடை மற்றும் ஹோட்டல்கள் ஆக்கிரமிப்புக்கு துணை போனதால் பெரும் விபத்து ஏற்பட்டதாக கூறுகின்றனர்.
தற்போது இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சி வைரலாக பரவி வருவது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
எனவே மாவட்ட நிர்வாகம் விரைந்து உரிய நடவடிக்கை எடுத்து நெடுஞ்சாலைத்துறை மற்றும் ஊராட்சி நிர்வாகம் & ஆக்கிரமித்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும், விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க சாலை அகலப்படுத்தவும், அப்பகுதி மக்கள் கோரிக்கை. மேலும் உரிய நடவடிக்கை இல்லை என்றால் அப்பகுதி மக்களை திரட்டி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


