செஞ்சியில் நலம் காக்கும் ஸ்டாலின் உயர் சிறப்பு மருத்துவமுகாம் தொடர்பாக ஆலோசனை கூட்டம்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய பெருந்தலைவர் வழக்கறிஞர் ஆர். விஜயகுமார் தலைமையில் நலம் காக்கும் ஸ்டாலின் உயர் சிறப்பு மருத்துவ முகாம் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் செஞ்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செஞ்சி மஸ்தான் கலந்துகொண்டு சிறப்பித்தார். அப்பொழுது வரும் செப்டம்பர் 13 ஆம் தேதி ஆலம்பூண்டி
ஸ்ரீ ரங்கபதி கல்விநிறுவன வளாகத்தில் நலம்காக்கும் ஸ்டாலின் உயர்சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ள நிலையில் இந்த முகாமில் செஞ்சி ஒன்றியத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு மருத்துவ வசதியினை பெற வழிவகை செய்யவேண்டும் எனவும் பொதுமக்களுக்கு மருத்துவ முகாம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அதேபோல் மருத்துவமுகாமிற்கு வரும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் சத்தியமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர் யோகப்பிரியா, செஞ்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள்,ஒன்றிய கவுன்சிலர்கள்,ஊராட்சி செயலாளர்கள் என ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.


