புதுச்சேரிக்கு வரும் 6ம்தேதி ராகுல்காந்தியும், வரும் 4ம்தேதி மல்லிகார்ஜுன கார்க்கேயும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருகின்றனர். மாநில அந்தஸ்து தருவது பற்றி பிரதமர் புதுச்சேரியில் பதில் தரவேண்டும் என்று காங்கிரஸ் பொதுச்செயலர் முகுல் வாஸ்னிக் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி காங்கிரஸ் அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டிஅளித்த முகுல் வாஸ்னிக்,கடந்த தேர்தலில் மாநில அந்தஸ்துக்கோரி பிரதமர் மோடி வாக்குறுதியால் பாஜகவுடன் முதல்வர் ரங்கசாமி கூட்டணி அமைத்தார். மாநில அந்தஸ்து கிடைக்காவிட்டால் வரும் தேர்தலை புறக்கணிப்பதாக ரங்கசாமி அறிவித்தற்கு பதில் சொல்ல வேண்டும்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் பெஸ்ட் புதுச்சேரியாக்குவதாக கூறிவிட்டு நாட்டிலேயே மோசமான ஆட்சியாளர்களால் ஊழலில் நாட்டிலேயே முதலிடம் பெற்றுள்ளது. அரசு ஒப்பந்தங்களுக்கு 30 சதவீதம் லஞ்சம் பெற்ற அரசு இது. மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.
பிரதமர் மோடி எக்கேள்விக்கும் பதில் அளிப்பதில்லை. ஒரு செய்தியாளர் சந்திப்பைக்கூட மோடி நடத்தியதில்லை. சுதந்திரத்துக்கு பிறகு வந்த பிரதமர்களில் இவரின் செயல்பாடு இப்படி உள்ளது என கூறிய முகுல் வாஸ்னிக்,புதுச்சேரிக்கு மாநிலஅந்தஸ்து தருவது பற்றி பிரதமரின் பதில் என்ன என்பதை புதுச்சேரியில் வரவுள்ள நிலையில் தெளிவுப்படுத்தவேண்டும் என்றார்.
எங்கள் கூட்டணிக்குள் பிரச்சினை இல்லை- இணைந்தே செயல்படுகிறோம். தொகுதிகளில் கூட்டணி கட்சிகள் இணைந்து தொகுதிகளில் பணியாற்றுகின்றன.
நாங்கள் கலந்து ஆலோசித்து வருகிறோம். அனைத்து பிரச்னைகளுக்கும் பேசி தேர்தலுக்கு முன்பாக தீர்வு காண்போம். தேர்தல் நாளின் போது புதுச்சேரி மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள் எனவும் அவர் கூறினார்.
தமிழகத்தில் வேட்பு மனுதாக்கல் செய்ய நேரம் உள்ளது. வேட்பாளர்கள் தேர்வு செய்து விட்டோம். இறுதி பட்டியல் விரைவில் தலைமை வெளியிடும். வேறு பிரச்சினை இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
பேட்டியிற் போது உடன் இருந்த காங்கிரஸ் தலைவர் வைத்தியலிங்கம் எம்பி,
வரும் 4ம் தேதி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்க்கே பொதுகூட்டம் மூலம் தேர்தல் பிரச்சாரம் செய்கிறார் கார்கே வரும்போது தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்றார்.வரும் 6ம் தேதி ராகுல்காந்தி புதுச்சேரி வருகிறார். அவர் பொதுக்கூட்டம் மூலம் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.. இடம்.. நேரம் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் என்றும் வைத்திலிங்கம் தெரிவித்தார்..


