in

புதுச்சேரி அதிக இடங்களில் போட்டியிட விருப்பதால் காங்கிரஸ்- திமுக கூட்டணியில் குழப்பம் நீடிக்கிறது.

 

புதுச்சேரி அதிக இடங்களில் போட்டியிட விருப்பதால் காங்கிரஸ்- திமுக கூட்டணியில் குழப்பம் நீடிக்கிறது.

புதுச்சேரியில் இண்டியா கூட்டணியில் காங்கிரஸ்- திமுக இடையே முதல் கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. அதில் முடிவு எட்டப்படவில்லை.

இந்நிலையில் இன்று (16ம்தேதி) இரவு காங்கிரஸ் அலுவலகத்தில் காங்கிரஸ் பொறுப்பாளர் கிரீஷ் ஷோடங்கர் தலைமையில் மாநிலத்தலைவர் எம்பி வைத்திலிங்கம், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, எம்எல்ஏ வைத்தியநாதன், முன்னாள் அமைச்சர் கந்தசாமி , ஷாஜகான், முன்னாள் எம்எல்ஏ அனந்தராமன், தேவதாஸ் ஆகியோருடன் பேசினார்.

அதேபோல் திமுக எம்பி தேர்தல் பொறுப்பாளர் ஜெகத்ரட்சகன் தலைமையில் மாநில அமைப்பாளர் சிவா , அவைத்தலைவர் எஸ்பி சிவக்குமார், எம்எல்ஏக்கள் அனிபால்கென்னடி, செந்தில்குமார் உள்ளிட்டோர் பேசினர்.

பின்னர் இரு தரப்பும் நட்சத்திர ஹோட்டலில் சந்திக்க வந்தனர்.
இக்கூட்டம் காங்கிரஸ் பொறுப்பாளர் கிரீஷ் ஷோடங்கர்- திமுக எம்பி ஜெகத்ரட்சகன் தலைமையிலும் ஆலோசனை கூட்டம் துவங்கியது.

திமுக தரப்பில் ஜெகத்ரட்சகன் எம்பி மட்டுமே முதலில் கூட்ட அரங்கு உள்ளே சென்றார். உள்ளூர் நிர்வாகிகள் யாரும் உள்ளே செல்லவில்லை. அவர்களை காங்கிரஸ் நிர்வாகிகள் அனைத்தும் யாரும் உள்ளே செல்லவில்லை.

பத்து நிமிடங்களுக்கு மேலாக காங்கிரஸ் நிர்வாகிகள் அழைத்தபோதும் திமுகவினரும் உள்ளே செல்லவில்லை.அதன் பிறகு ஜெகத்ரட்ஜகன் எம்பி அழைத்த பிறகு தான் திமுகவினர் உள்ளே சென்றனர். இரு தரப்பும் அதிக இடங்களில் போட்டியிடுவதில் உறுதியாக இருப்பதால் குழப்பம் நீடிக்கிறது.

தொடர்ந்து இரு கட்சிகளும் போட்டியிடும் தொகுதிகள் மற்றும் எண்ணிக்கைகள் குறித்து ஆலோசனை நடந்தது. இரு தரப்பும் கூடுதல் தொகுதி, கூட்டணிக்கு தலைமை வகிப்பதில் உறுதியாக இருப்பதால் இரண்டாம் கட்டப்பேச்சுவார்த்தையும் முடிவு எட்டப்படாமல் முடிவடைந்தது.

இது குறித்து கிரீஷ் ஷோடங்கர் கூறுகையில், 30 தொகுதிகளில் திமுகவிற்கு 9 இடங்களை தந்து 21 தொகுதிகளில் போட்டியிட காங்கிரஸ் விரும்புகிறோம். இருவரும்பெரியக்கட்சிகள்.

அதிக தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவிக்கின்றனர். தலைமை யார் என்பதையும் பேசி வருகிறோம். திமுக 15 தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறது.உள்ளே எதிர்கால முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர் என்றார்.

திமுக எம்பி ஜெகத்ரட்சகன் கூறுகையில், “நாங்கள் 30 தொகுதிகளில் போட்டியிட விரும்பினாலும் கூட்டணி என்றால் பேச்சுவார்த்தையில்தான் முடிவு எடுக்கமுடியும். பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்துள்ளது” என்றனர்.

புதுச்சேரி காங்கிரஸ் கட்சி தலைவர் வைத்தியலிங்கம் எம்பி கூறுகையில்,
பேச்சுவார்த்தை சுலபமாக நடந்தது ..இன்னும் இரண்டு மூன்று பேச்சு வார்த்தைகள் நடக்கும் .வேட்பு மனு தாக்கல் வாபஸ் பெறும்வரை பேச்சுவார்த்தை நடக்கும் என்றார்.

What do you think?

அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரர் திருக்கோயிலில் பங்குனி மாத பிரதோஷ வழிபாடு

பாஜகவிற்கு பல்வேறு நிபந்தனைகளை வைத்துள்ளார் முதலமைச்சர் ரங்கசாமி.