தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் : எஸ்டிபிஐ தலைவர் நெல்லை முபாரக்
தவெக உட்பட அனைத்து கட்சிகளும் பாஜகவிற்கு எதிராக இருக்க வேண்டும் : நெல்லை முபாரக்
இஸ்லாமியர்களுக்கு விகிதாச்சார அடிப்படையில் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என கூட்டணியில் வலியுறுத்துவோம் : நெல்லை முபாரக்யாருடன் கூட்டணி என்பது ஜனவரி மாதம் நடைபெறும் தேசிய பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் : நெல்லை முபாரக்
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை இழுத்து மூட வேண்டும் எனவும் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் எனவும் தமிழக அரசை எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வலியுறுத்தினார்.
நடைபெற்றது. மாநில செயலாளர் ஹமீது தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாநில தலைவர் நெல்லை முபாரக் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அத்துடன் 300க்கும் மேற்பட்ட பூத் கமிட்டி முகவர்கள் பங்கேற்றனர். 2026 ஆம் ஆண்டு தேர்தல் தொடர்பாக பொதுமுகவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. கூட்டத்தின் போது செய்தியாளர்களை சந்தித்த நெல்லை முபாரக், 2026 ஆம் ஆண்டு தேர்தலில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் பூத் முகவர்களை நியமித்துள்ளதாக தெரிவித்தார்.
ஜனவரி மாதம் இருபதாம் தேதி மங்களூரில் நடைபெற உள்ள எஸ் பி பி ஐ கட்சியின் தேசிய பொதுக்குழு கூட்டத்தில் தமிழக தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை முடிவு செய்ய உள்ளதாக கூறினார். 2026 ஆம் ஆண்டு தேர்தலில் விகிதாச்சார அடிப்படையில் இஸ்லாமியர்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என கூட்டணி அமைக்கும் கட்சியிடம் வலியுறுத்துவோம் என்று குறிப்பிட்டார்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்றம் சமூக அமைதியை குலைக்கும் வகையில் செயல்பட்டாலும் எந்தவித அசம்பாவிதங்களும் நிகழாமல் பாதுகாப்பு வழங்கிய திமுக அரசை பாராட்டுகிறோம் என்று கூறினார்.
தமிழகத்தில் பாஜக எதிர்ப்பு அரசியலை செய்தால்தான் வெற்றி பெற முடியும் என்ற சூழல் இருப்பதால் அனைத்து கட்சிகளும் பாஜக எதிர்ப்பு என்பதில் உறுதியாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.
போதைப் பொருட்கள் புழக்கத்தை காவல்துறையும் அரசும் பொதுமக்களும் இணைந்து தடுக்க வேண்டும் என்றும் டாஸ்மாக்கை தமிழ்நாடு அரசு இழுத்து மூட வேண்டும் எனவும், பூரண மதுவிலக்கு வேண்டும் என்றும் கோரிக்கையை முன்வைத்தார்.

