in

இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட, 25-வது மாநாடு தொடக்கம்

இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட, 25-வது மாநாடு தொடக்கம்.

 

சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட 25-வது மாநாடு பேரணியுடன் தொடக்கம்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன் கோவிலில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மயிலாடுதுறை மாவட்ட 25-வது மாநாடு செல்வராசு நினைவரங்கத்தில் இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.

ஜீவா நகரில் உள்ள கட்சி அலுவலகத்திலிருந்து மாவட்ட பிரதிநிதிகள், நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் 200 க்கும் மேற்பட்டோர் முக்கிய வீதிகளின் வழியாக பேரணியாக மாநாட்டு அரங்கை அடைந்தனர். மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் இடும்பையன் கட்சி கொடியேற்றி வைத்து மாநாட்டை தொடங்கிவைத்தார்.

மாவட்ட செயலாளர் சீனிவாசன் முன்னிலையில் மறைந்த நாகை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசு திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து மௌன அஞ்சலி செலுத்தி, மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

What do you think?

கொள்ளிடம் பிரத்யங்கிரா தேவி ஆலயத்தில், 100 கிலோ மிளகாயை கொண்டு நடத்தப்பட்ட நிகும்பலா யாகம்

சிவகங்கை வீரமாகாளியம்மன் திருக்கோவில் பூச்சொரிதல் திருவிழா கொடியேற்றம்