செம்பரம்பாக்கம் ஏரியில் கொட்டும் மழையில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர்கள்
செம்பரம்பாக்கம் ஏரியில் கொட்டும் மழையில் குடைபிடித்தபடி ஆய்வு மேற்கொண்ட கலெக்டர்கள்
தொடர் மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது இந்த நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன், மாவட்ட கண்காணிப்பு அதிகாரி கந்தசாமி ஆகியோர் கொட்டும் மழையில் குடைபிடித்தபடி செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரி நீர் திறந்து விடப்படுவது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும் ஏரிக்கு வரக்கூடிய நீரின் அளவு எவ்வளவு உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஏரியை எவ்வாறு பராமரித்து வருகிறார்கள் என்பது குறித்து அதிகாரிகளுடன் கேட்டறிந்தனர்.


