in

தஞ்சை பெரிய கோவிலில் சொக்கப்பனை ஏற்றப்பட்டது

தஞ்சை பெரிய கோவிலில் சொக்கப்பனை ஏற்றப்பட்டது

 

கார்த்தியை முன்னிட்டு உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் சொக்கப்பனை ஏற்றப்பட்டது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பௌர்ணமி முன்னிட்டு கிரிவலம் ஏராளமான பொதுமக்கள் பங்கு பெற்றனர்.

கார்த்திகை தீப திருவிழா முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள ஆலயங்கள் சிவாலயம் மற்றும் முருகன் விநாயகர் ஆகிய ஆலயங்களில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வு வரிசையாக நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவில் முன்பு 15 அடி உயரத்திற்கு பண ஓலை மற்றும் பட்டாசுகளால் சொக்கப்பனை அமைக்கப்பட்டு பின்பு கோவிலில் இருந்து பெருவுடையார் பெரியநாயகி அம்மன் எடுத்துவரப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு காட்சியளித்தனர்.

இதனை அடுத்து அவர்களுக்கு தீபாராதனை காட்டப்பட்டது . தஞ்சை பெரிய கோவில் முன்பு வைக்கப்பட்டிருந்த சொக்கப்பனை அபிஷேகம் செய்யப்பட்டு கொளுத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதனை அடுத்து நடைபெற்ற கிரிவலத்தில் ஏராளமான பொதுமக்கள் பக்தர்கள் கலந்து கொண்டு தஞ்சை பெரிய கோவிலை சுற்றி வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

What do you think?

மேல்மலையனூர் அங்காளம்மன் கார்த்திகை தீப திருநாள்

சமந்தா மாதிரி ஆக்‌ஷன் கேரக்டர்கள்ல நடிக்கவும் ஆசைப்படுறேன் – நடிகை தேஜு அஸ்வினி