பேருந்து படியில் தொங்கியபடி பயணம் செய்த மாணவர்களுக்கு சாக்லெட்
பேருந்து படியில் தொங்கியபடி பயணம் செய்த மாணவர்களுக்கு சாக்லெட் கொடுத்து, பஸ் படிகளில் நிற்பதை விட ஒழுக்கத்தை படி, விதிகளை படி, நல்ல பண்புகளை படி, நல்ல சிந்தனைகளை படி என அட்வைஸ் செய்த மாநகர போக்குவரத்து காவல்துறையினர் ஒட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு கதர் ஆடை அணிவித்து கெளரவித்து இன்றைக்கு சாக்லெட், துண்டு நாளைக்கு ஃபைன் என கூறி
எப்பா தலையில குருவி கூடி கட்டிட போகுது முடிய வெட்டுங்கப்பா என எச்சரித்து அனுப்பினார்.
தஞ்சை மாநகர பேருந்தில் பள்ளி மற்றும் கல்லூரி நேரத்தில் மாணவர்கள் படிகட்டில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்து வருகின்றனர்.
மாநகர போக்குவரத்து துறையினர் பல முறை எச்சரித்தும், அபராதம் விதித்தும், மாணவர்கள் பேருந்த படிக்கட்டில் தொங்குவதை நிறுத்தவில்லை.
இந்நிலையில், இன்று காலை தஞ்சை ஆற்று பாலம் அருகில்மாநகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் தலைமையில் காவலர்கள் பேருந்து படிக்கட்டில் தொங்கிபடி வந்த பேருந்துகளை நிறுத்தினர்.
படிக்கட்டில் தொங்கிய மாணவர்கள் போலிசாரை கண்டதும் ஒளிந்தனர்.
பேருந்தில் பெண்கள் அதிகம் இருந்ததால் வெட்கத்துடன் தலை குனிந்து நின்றவர்கள் கையில் விலை உயர்ந்த சாக்லெட் தினித்ததும் அதிர்ச்சி ஆனார்கள்..
பஸ் படிகளில் நிற்பதை விட ஒழுக்கத்தை படி என அட்வைஸ் செய்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு கதர் ஆடை அணிவித்து இன்றைக்கு சாக்லேட் நாளைக்கு ஃபைன் என எச்சரித்து அனுப்பி வைத்தனர் காவல்துறையினர்.
அந்த நேரத்தில் அந்த சாலை வழியாக வந்த உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் காவல்துறையினரின் பணியை பாராட்டி வாழ்த்தினார் .
அமைச்சருக்கு காவல் ஆய்வாளர் கதர் ஆடை அணிவித்து சாக்லேட் கொடுத்தார்.
தஞ்சை மாநகர போக்குவரத்து காவல்துறையினர் தனியார் அறக்கட்டளை நிறுவனத்துடன் இணைந்து இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.