மயிலாடுதுறை சோழன்பேட்டை மகா மாரியம்மன் ஆலய சித்ரா பௌர்ணமி உற்சவம்
மயிலாடுதுறை அருகே சோழன்பேட்டை மகா மாரியம்மன் ஆலய சித்ரா பௌர்ணமி உற்சவம், நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து சிறப்பு அபிஷேகம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த கிராமத்தில் பழமை வாய்ந்த மகா மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது.
சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு விரதம் இருந்த பக்தர்கள் பால்குடங்கள் அல்கு காவடிகள் எடுத்து வந்து வழிபாடு செய்தனர்.
காவிரி ஆற்றங்கரையில் இருந்து துவங்கிய பால்குடம் மற்றும் காவடி ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக ஆலயத்தை வந்து அடைந்ததும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மகாதீபாரதனை செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.