in

தேவூர் அருள்மிகு செல்லமுத்து மாரியம்மன் ஆலயத்தில் சித்திரை பெருவிழா

தேவூர் அருள்மிகு செல்லமுத்து மாரியம்மன் ஆலயத்தில் சித்திரை பெருவிழா

 

நாகை அருகே தேவூர் அருள்மிகு செல்லமுத்து மாரியம்மன் ஆலயத்தில் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு மேளம் தாளம் முழங்க ஆட்டம் பாட்டத்துடன் மயில் காவடி , பால் காவடி, அலகு காவடி, பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்.

நாகப்பட்டினம் மாவட்டம் தேவூரில் பழமைவாய்ந்த அருள்மிகு செல்லமுத்து மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது.

இவ்வாலயத்தின் சித்திரை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக நடைப்பெறும் அந்த வகையில் இந்த ஆண்டின் சித்திரைப் பெருவிழா கடந்த 20 ம் தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

தொடர்ந்து மின் அலங்கார ரதத்தில் அம்மன் வீதி உலா நடைப்பெற்று வந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பால்குட ஊர்வலம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.

காப்புக்கட்டி விரதமிருந்த பெண்கள் மஞ்சாலடை அணிந்து தலையில் பால்குடம் சுமந்தும், பக்தர்கள் மயில் காவடி, பால் காவடி, அலகு காவடி உள்ளிட்ட காவடிகள் காந்திநகர், பாரதியார் நகர், வ.உ.சி நகர், தெற்கு தெரு உள்ளிட்ட பகுதிகளிலிருந்து மேளதாளங்கள் முழங்க ஆட்டம் பாட்டத்துடன் ஊர்வலமாக எடுத்து வந்து மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

தொடர்ந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைப்பெற்று மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

What do you think?

மாணவர்களுக்கு பிரியாணி விருந்து வைத்த பேராசிரியர்கள்

குடும்பத்துடன் Award வாங்க டெல்லி சென்ற அஜித்