மானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லி சோமநாதர் திருக்கோவிலில் சித்திரை பெருவிழா ரிஷப வாகனம்
மானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லி சோமநாதர் திருக்கோவிலில் சித்திரை பெருவிழா ரிஷப வாகனத்தில் பவனி வந்த சுவாமி அம்பாள் ஏராளமான பக்தர்கள் அர்ச்சனைகள் செய்து வழிபாடு
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகர் மையப்பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ ஆனந்தவல்லி அம்பாள் சமேத ஸ்ரீ சோமநாதர் சுவாமி திருக்கோவிலில் சித்திரை மாத உற்சவ பெருவிழாவை முன்னிட்டு சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
முன்னதாக ஸ்ரீ சோமநாத சுவாமி பிரியாவிடை அம்மனுடன் ரிஷப வாகனத்திலும் ஸ்ரீ ஆனந்தவல்லி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் மற்றொரு ரிஷப வாகனத்திலும் எழுந்தருினார்கள் தொடர்ந்து சுவாமி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் தீப தூப ஆராதனை காண்பித்து கோடி தீபம் நாக தீபம் கும்ப தீபம் மற்றும் சோடச உபச்சாரங்கள் நடைபெற்று பஞ்சமுக கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டது.
நிறைவாக உதிரி புஷ்பங்களால் அர்ச்சனைகள் செய்து ஏக முக தீபாரதனை காண்பிக்கப்பட்டன இதனை அடுத்து மங்கள வாத்தியங்களுடன் சுவாமி அம்பாளை வாகனங்களில் எழுந்தருள செய்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்தனர்.
மின்னொழியின் ரிஷப வானத்தில் பவனி வந்த சுவாமி அம்பாளுக்கு ஏராளமான பக்தர்கள் அர்ச்சனைகள் செய்து வழிபட்டனர்.