நாமக்கல் திருச்செங்கோடு அடுத்த இளையபெருமாள் ஆலய சித்திரை தேர் திருவிழா
நாமக்கல் திருச்செங்கோடு அடுத்த இளையபெருமாள் ஆலய சித்திரை தேர் திருவிழா 3-ம் நாள் அனுமந்த திருவீதி உலா
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் இறையமங்கலம் பெருமாள் மலையில் மலை மீது அமைந்துள்ளது.
அருள்மிகு இளையபெருமாள் (எ) பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி திருக்கோயில் , இங்கு இன்றுசித்திரை தேர்த் திருவிழாவை முன்னிட்டு மே – 4 கொடியேற்றதுடன் திருவிழா துவங்கியது. நேற்று விழாவின் 3-ம் நாள் நிகழ்வாக மே – 6ந்தேதி இரவு 9 – மணிக்கு அனுமந்த கிரிவலம் நிகழ்வு மிக விமர்சையாக நடைபெற்றது.
அப்போது உற்சவ ஸ்ரீதேவி பூதேவி சமேத பிரசன்ன வெங்கட்ரமண சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் பின் அலங்காரம் செய்யப்பட்டு.
பல்வோறு ஆராத்திகள் காண்பிக்கப்பட்டு பிறகு மங்கள இசையோடு கிரிவலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தந்தார் பின் பள்ளியரை பூஜை நடைபெற்றது இதில் ஏராளாமானவர்கள் கலந்து கொண்டனர், 7-ம் தேதி ஸ்ரீ கருட வாகனத்திலும் 8-ந்தேதி 5 – மணிக்கு .மேல் 8 மணிக்கும் திருக்கல்யாண வைபவம், 9-ம் தேதி குதிரை வாகனத்திலும் 10 -ந்தேதி அதிகாலை 6 மணிக்கு ரதம் ஏறும் நிகழ்வும் தேர் நிலை பெயர்த்தல் நிகழ்வு மாலை 3 -4 5- மணிக்கு தேர் வடம்பிடித்து இழுத்தல் திருவீதி உலாவும், 11ந் தேதி சத்தாபரணம், வாண வேடிக்கை12. ந்தேதி மஞ்சள் நீராட்டுடன் நிறைவுபெறுகின்றன தினமும் அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் மிக சிறப்புடன் வழங்கபடுகின்றன. ,