in

புவனகிரி ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் சித்திரை மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம்

புவனகிரி ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் சித்திரை மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம்

 

புவனகிரி ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு அம்மனுக்கு ஊஞ்சல் தாலாட்டு நடைபெற்றது.

அம்மன் சிவசக்தியாக சிவ பூஜை அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

கடலூர் மாவட்டம் புவனகிரியில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

அங்காளம்மன் சிவசக்தி ரூபம் கொண்டு சிவலிங்கத்தை நீரால் அபிஷேகம் செய்யும் அலங்காரத்தில் அம்மன் பம்பை ஒலிக்க கோவிலை சுற்றி வலம் வந்து தாலாட்டு மண்டபத்தில் ஊஞ்சலில் அமர்ந்தார்.

 

பின்னர் பம்பை ஒலி முழங்க தாலாட்டு பாடலுடன் ஊஞ்சலில் அம்மனுக்கு தாலாட்டு உற்சவம் நடைபெற்றது. பின்னர் மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு அங்காளம்மனை வழிபட்டு சென்றனர்.

What do you think?

எனக்கு உடல்நிலை பாதித்தபோது தினமும் என்னை வந்து பார்ப்பார்..Samantha

ஊத்துக்காடு அருள்மிகு தேதி ஸ்ரீ எல்லம்மன் தேவஸ்தானம் தெப்பல் உற்சவம்