காய்கறி மார்க்கெட் முதல் கருணாநிதி சிலை வரை மூன்று கிலோ மீட்டர் தூரம் நடை பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின்
திருவண்ணாமலை திருக்கோவிலூர் சாலையில் உள்ள கலைஞர் திடலில் இன்று மாலை 5 மணி அளவில் திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களை சேர்ந்த 12 சட்டமன்ற உறுப்பினர்களை ஆதரித்து முதலமைச்சர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
நேற்று இரவு திருவண்ணாமலைக்கு வந்த முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை திருவண்ணாமலை காய்கறி மார்க்கெட் சந்திப்பில் காய்கறி விற்பனை செய்யும் விற்பனையாளர்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
பின்னர் தேரடி வீதி சின்ன கடைவீதி போளூர் சாலை வழியாக கலைஞர் சிலை வரை சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரத்துக்கு மேலாக நடை பயணம் மேற்கொண்டார்.
வழி நெடுகிலும் பொதுமக்கள் உற்சாகத்துடன் ஸ்டாலினை காண குவிந்தனர். மேலும் பொது மக்களிடம் கைக்கூலிக்கி நலம் விசாரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பின்னர் கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்து அருகில் இருந்த டீக்கடையில் எ.வ.வேலு மற்றும் தொண்டர்களுடன் தேநீர் அருந்தினார்.


