in

நீடூரில் ஒருவரை பட்டாக்கத்தியால் சராசரியாக வெட்டும் சிசிடிவி காட்சிகள் வைரல்

நீடூரில் ஒருவரை பட்டாக்கத்தியால் சராசரியாக வெட்டும் சிசிடிவி காட்சிகள் வைரல்.

 

மயிலாடுதுறை அருகே நீடூரில் ஒருவரை இரு சக்கர வாகனத்தில் வந்த இருவரில் ஒருவர் பட்டாக்கத்தியால் சராசரியாக வெட்டும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரல்.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே நீடூர் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் முகமது ஹாலிக்(36). இவர் ஏ.எம்.ஹெச் திருமண மண்டபத்திற்கு எதிர்ப்புறம் மரத்தடி நிழலில் இருவரிடம் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் இரண்டு மர்ம நபர்கள் வந்தனர்.

அதில் அமர்ந்து வந்தவர் வாகனத்தில் இருந்து இறங்கி ஓடிச் சென்று முகமது ஹாலிக்கை சரமாரியாக பட்டா கத்தியால் வெட்டி விட்டு தப்பி ஓடினர். முகம் உடல் கை உள்ளிட்ட ஏழுக்கு மேற்பட்ட இடங்களில் வெட்டுப்பட்டு உயிருக்கு போராடிய நிலையில் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு முகமது ஹாலிக்குக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு கும்பகோணம் தனியார் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். ஒருவரை படுகொலை செய்ய முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருசக்கர வாகனத்தில் வந்து மர்ம நபர்கள் முகமது ஹாலிக்கை பட்டாகத்தியால் வெட்டும் சிசிடிவி காட்சிகள் சமூகவலைத்தளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மயிலாடுதுறை போலீசார் இச்சம்பவம் தொடர்பாக ஹாலிக்குடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த இருவரிடமும் குடும்பத்தாரிடமும் முன்பகை ஏதாவது உள்ளதா என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

What do you think?

சுதந்திர போராட்ட தியாகி விஸ்வநாத தாஸ் 139 பிறந்த நாள் விழா

ராமநாதபுரம் மீன்வளத்துறை அதிகாரியை கைது செய்த லஞ்ச ஒழிப்புத்துறை.!