மனுஷி” படத்திற்கு சான்றிதழ் வழங்க மறுத்த CBFC
வெற்றி மாறன் தயாரித்த மனுஷி திரைப்படத்திற்கு சான்றிதழை மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் (CBFC) எவ்வாறு மறுக்க முடியும் என்று சென்னை உயர் நீதிமன்றம் புதன்கிழமை (ஜூன் 4, 2025) கேள்வி எழுப்பியது.
நாட்டின் நலனுக்கு எதிரான காட்சிகள் இடம் பெற்றிருபதாக காரணம் காட்டி மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் (CBFC) “மனுஷி” படத்திற்கு சான்றிதழ் வழங்க மறுத்துவிட்டது.
சென்னை உயர் நீதிமன்றதில் வழக்கு தொடுத்தார் வெற்றிமாறன், CBFC….யிடம், குறிப்பிட்ட ஆட்சேபனைக்குரிய பகுதிகள் குறித்து விளக்கம் கேட்டுள்ளது நீதிமன்றம்.
படம் மாநிலத்தின் ஒருமைப்பாட்டிற்கு எதிரானது என்று CBFC கூறியது. அந்தப் படம் அரசாங்கக் கொள்கைகளை அவமதிப்பதாகவும் இருந்ததாகவும் , வடக்கு/தெற்கு பிரிவினைக்கு வழிவகுக்கும் சாத்தியக்கூறுகள், இருபதாகவும் பல காட்சிகள் நாட்டின் நலன்களுக்கு எதிராகவும்’, மத்திய அரசை எதிர்மறையாக சித்தரித்ததாகவும், குற்றம் சாட்டப்பட்டது.
ஆட்சேபனைக்குரிய காட்சிகளைக் குறிப்பிடாமல் CBFC எவ்வாறு சான்றிதழை மறுக்க முடியும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் கேள்வி எழுப்பியது.
திருத்தங்கள் தேவைப்படும் குறிப்பிட்ட பகுதிகள் குறித்து திரைப்படத் தயாரிப்பாளர்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது. ஜூன் 11 ஆம் தேதிக்குள் CBFC- விளக்கம் அளிக்க நீதிமன்றம் கோரியுள்ளது.