‘ஜானகி Vs கேரள மாநிலம்’ திரைப்படத்திற்கு சான்றிதழ் கொடுக்க மறுக்கும் CBFC..mp படத்திற்கே இந்த நிலையா?
மத்திய அமைச்சரும் பாஜக தலைவருமான சுரேஷ் கோபி மற்றும் நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடித்த மலையாள திரைப்படமான ‘ஜேஎஸ்கே – ஜானகி vs கேரளா மாநிலம்’ படத்தில் ‘ஜானகி’ என்ற பெயரைப் பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தது குறித்து மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தை (CBFC) கேரள உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை கேள்வி எழுப்பியது.
சான்றிதழ் தாமதம் தொடர்பாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான காஸ்மோஸ் என்டர்டெயின்மென்ட் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி தலைப்பில் ராமர் மற்றும் சீதை பெயர்களைப் கொண்டுள்ளது, என்று சுட்டிக்காட்டினார்.
எனவே CBFC அதற்கு எந்த ஆட்சேபனையும் தெரிவிக்க தேவையில்லை. இந்திய துணை சொலிசிட்டர் (Solicitor) ஜெனரல் ஓம் ஷாலினா, CBFC சார்பாக உயர்நீதிமன்றத்தில் ஆஜராகி, ஜானகி என்ற படத்தின் சென்ட்ரல் character , சீதா தேவியின் மறுவடிவமைப்பு தொடர்பான ஆட்சேபனை தெரிவித்தோம்..
நீதிபதி கடந்த காலங்களில் படங்களின் தலைப்புகளில் கடவுள்களின் பெயர்கள் இருந்தபோதிலும் சென்சார் சான்றிதழ்கள் வழங்கவில்லையா, ” கதாபாத்திரத்தின் பெயரை ஏன் மாற்ற வேண்டும்? ஜானகி என்பது எல்லா இடங்களிலும் பயன்படுத்தப்படும் பொதுவான பெயர். இதில் என்ன மத நோக்கம்? இருக்கிறது என்று கேள்வி கேட்க.
“ஒரு திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்திற்கு கொடுக்கப்படும் எந்தவொரு பெயரும் ஒரு மதத்துடன் தொடர்புடையதாக இருந்தால் அதை சர்ச்சைக்குரியதாகமாறலாம். அரசியல் கட்சிகள் தீவிரமான பிரச்சினையாக மாற்றிவிடுவார்கள் ” என்று CBFC தரப்பில் கூறப்பட்டது.
ஜானகி vs கேரளா மாநிலம் திரைப்படத்தின் வெளியீடு ஜூன் 27 அன்று திட்டமிடப்பட்டது, ஆனால் நடந்து வரும் சர்ச்சை காரணமாக ரிலீஸ் தாமதமாகியுள்ளது.


