தேவரகொண்டா மீது வழக்குப் பதிவு
ரெட்ரோ திரைப்பட விழாவில் அவமதிக்கும் வகையில் பேசியதாக விஜய் தேவரகொண்டா மீது புகார் அளிக்கப்பட்டுள்ளதால்.
எஸ்சி/எஸ்டி சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பழங்குடி சமூக கூட்டமைப்பின் தலைவர் நேனாவத் அசோக் குமார் இந்த புகாரை அளித்துள்ளார்.
ரெட்ரோ திரைப்பட விழாவில் தேவரகொண்டாவின் பேச்சு பழங்குடி சமூகத்தை அவமதிக்கும் வகையில் இருப்பதாக குற்றம் சாட்டபட்டுள்ளார். சைபராபாத்தில் உள்ள ராயதுர்கம் காவல் நிலையத்தில் தேவரகொண்டா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
ரெட்ரோ திரைப்பட விழா ஹைதராபாத்தில் நடைபெற்ற போது. சிறப்பு விருந்தினராக விஜய் தேவரகொண்டா கலந்து கொண்டார். அப்போது, காஷ்மீரில் உள்ள பஹல்காமில் தாக்குதல் நடந்தது. இந்த சூழலில், விஜய் தேவரகொண்டா பாகிஸ்தானுக்கு எதிராக பேசினார். அப்போது, இந்தியா-பாகிஸ்தான் போரை பழங்குடி சமூகத்துடன் ஒப்பிட்டு பேசியதாக கூறப்படுகிறது.
‘முன்பு பழங்குடியினக் குழுக்கள் சண்டையிட்டது போல, இப்போது இந்தியாவும் பாகிஸ்தானும் சண்டையிடுகின்றன’ என்று அவர் கூறினார்.
இந்தக் கருத்தை பழங்குடி சமூகத்தினர் எதிர்த்துள்ளனர். விஜய் தேவரகொண்டாவின் பேச்சுக்கு பழங்குடி அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன..
பழங்குடி சமூகத்திற்கு ஆயிரக்கணக்கான ஆண்டு வரலாறு உண்டு.. நடிகர்கள் பேசும்போது உண்மையை சிந்தித்துப் பேச வேண்டும் என்று பழங்குடி அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
விஜய் தேவரகொண்டாவின் பேச்சுக்கு பல இடங்களில் காவல்துறையினரிடம் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த சூழ்நிலையில், விஜய் தேவரகொண்டா மீது ராயதுர்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


